மலேசிய கினியின் நன்றியைத் தெரிவிக்க இலவச திரைப்படம்

மலேசியாகினி  அதன்  சட்டக்  காப்பு  நிதிக்கு   தாராளமாக     வாரி   வழங்கிய  அதன்  வாசகர்களுக்கு    நன்றி   தெரிவிக்க     ஸ்டீபன்  ஸ்பீல்பெர்க்கின்   “த  போஸ்ட்”  திரைப்படத்தை    இலவசமாக  திரையிடவுள்ளது.

அப்படம்  (பெட்டாலிங்   ஜெயாவில்   பண்டார்    உத்தாமாவில்   உள்ள)  டிஜிவி 1 உத்தாமா  தியேட்டரில் ,  மலேசியாவில்   அப்படம்  மலேசியாவில்  திரையிடப்படுவதற்கு   ஒரு   வாரத்துக்கு   முன்னதாக,   மார்ச்   முதல்  நாள்  இரவு  9மணிக்குத்   திரையிடப்படும்.

நன்கொடை  வழங்கியவர்களும்   நீண்டகால   சந்தாதாரர்களும்   இந்த  இலவசக்  காட்சிக்கு   ஆளுக்கு  இரண்டு  நுழைவுச் சீட்டுகளைப்  பெற்றுக்கொள்ளலாம்    என  மலேசியாகினி    தெரிவித்துக்  கொண்டுள்ளது.

வியட்நாம்   போர்   உச்சக்கட்டத்தில்  இருந்தபோது   அப்போதைய  அமெரிக்க   அதிபர்   ரிச்சர்ட்  நிக்சனுக்கு    எதிராகக்  குற்றஞ்சாட்டிய    த  வாஷிங்டன்  போஸ்ட்  பத்திரிகை  குற்றச்சாட்டுகளை  நிரூபிக்க   பெண்டகன்   பேப்பர்ஸ்     ஆவணங்களையும்   வெளியிட்டுப்  பரபரப்பை   உண்டாக்கியது.  அதைச்  சுவைப்பட   சொல்லும்   ஓர்    அரசியல்  படம்தான்   ‘த  போஸ்ட்’.

மெரில்  ஸ்ட்ரீப்,  டோம்  ஹெங்ஸ்   முக்கிய  வேடங்களில்    நடித்துள்ளனர்.