எதிரணி வெற்றி பெற்றால் சீனாவுடனான உறவுகள் நலிவடையும் – நஜிப்

எதிரணியினர்  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்றினால்  சீனாவுடனான   உறவுகளில்    சரிவு  ஏற்படும்   என்று   எச்சரிக்கிறார்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்.

சீனாவுடன்  தொடர்புள்ள  திட்டங்களைத்   தாக்கிப்  பேசுவதை   எதிரணியினர்  வழக்கமாகக்  கொண்டிருப்பதாக  பிஎன்  தலைவர்  கூறினார்.

“இந்நிலையில்  எதிரணியினர்  ஆட்சியைப்  பிடித்தால்   சீனாவுடனான    உறவுகள்     நலிவடையும்.

“மலேசிய-சீன   உறவுகளுக்காக,   அப்படிப்பட்ட   நிலை  ஏற்படுவதைத்  தவிர்க்க  வேண்டும்”.  பிரதமர்  இன்று   கோலாலும்பூர்,  ஸ்ரீகெம்பாங்கானில்   மலேசிய  சீனர்   சங்கச்  சம்மேளனத்தின்  சீனப்   புத்தாண்டு  உபசரிப்பில்   கலந்துகொண்டார்.

“எடுத்துக்காட்டுக்கு   ஃபோரெஸ்ட்   சிட்டியில்   அடுக்ககங்கள் அல்லது     கொண்டோமினியம்    வாங்குவோருக்கு  மலேசியக்  குடியுரிமை   வழங்கப்படும்   என்கிறார்கள்,   குவாந்தானில்   உள்ள   மலேசிய- சீனத்   தொழில்  பூங்கா  சீனாவின்  ஒரு   பகுதி    என்றும்   அதனுள்   மலேசியர்கள்  நுழைய   முடியாது  என்றும்  கூறுகிறார்கள்.

“இதெல்லாம்    மலேசிய-சீன  உறவுகளைக்  கொச்சைப்படுத்தும்    செயல்களாகும்”,  என்று   நஜிப்   குரிப்பிட்டார்.