பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்குத் தெரிவான முதல் இந்து தலித் பெண்

பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவர் மற்றும் பெண்கள் ஆகியோர்களின் உரிமைக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அங்கு முதன்முறை PPP கட்சி சார்பாக ரத்னா பக்வான் தாஸ் சாவ்லா என்ற இந்து பெண் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்.

தற்போது இதன் அடுத்த கட்டமாக அங்கு சிந்த் மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணா குமாரி கோல்ஹி என்ற முதல் இந்து தலித் பெண் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

பாகிஸ்தானின் PPP என்ற மக்கள் கட்சி சார்பாக 39 வயதாகும் கிருஷ்ணா குமாரி கோல்ஹி தேர்வாகி உள்ளார். வறிய குடும்பத்தில் பிறந்து கஷ்டங்களை அனுபவித்தி வளர்ந்த இவர் கல்வியில் தேறி சிந்த் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் பிரிவில் பட்டம் பெற்றவர் ஆவார். மிக இளவயதில் அதாவது 16 வயதில் இவர் லால்சந்த் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் தார் பகுதி மற்றும் அருகாமையில் நலிந்த பிரிவினர் மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் ஆவார்.

பல தசாப்தங்களுக்கு முன் கிருஷ்ணா குமாரி இனது குடும்பத்தினர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள் ஆவர். இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தான் செனட் சபையில் 52 உறுப்பினர்களுக்காக நடந்த தேர்தலில் சிந்து மாகாணத்தில் இருந்து இவர் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com