தொழிலாளர்களுக்காக உணவக உரிமையாளர்கள் கெஞ்சல்!  நியாமும், அநியாயமும்!

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 8, 2018 – மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் தங்களின் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு ஆள்பல பற்றாக்குறையால் அல்லல்படுவது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்காக அவர்கள் விடுக்கும் கோரிக்கையை, மத்திய தேசிய முன்னணிக் கூட்டரசு பரிசீலிக்கவில்லை!

நியாயமானது

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின்(பிரிமாஸ்) 17-ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம், மார்ச் 6-ஆம் நாள், தலைநகரம் கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியில் நடைபெற்றபோது, அதில் தலைமையுரை ஆற்றிய பிரிமாஸ் தலைவர் முத்துசாமி திருமேனி, வெளிநாட்டுத் தொழிலாளர்களை வரவழைக்க அனுமதிக்கும்படி கெஞ்சாதக் குறையாகக் கேட்டுக் கொண்டார்.

இந்த சங்கத்தின் 16-ஆவது ஆண்டுக் கூட்டம் ஈராண்டுகளுக்கு முன் 2016, அக்டோபர் 12-ஆம் நாள் கோலாலம்பூர் நேதாஜி மண்டகத்தில் நடைபெற்ற போதும் இதே கோரிக்கையை முத்துசாமி வைத்தார். வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக் குறையால், உணவகத் தொழில் மட்டும் பாதிக்கவில்லை; முடிதிருத்தும் தொழில், தோட்டத்தொழில், உலோக மறுசுழற்சித் தொழில், சில்லறை வணிகம் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்படுகின்றன.

அதைப்போல, இந்தியர்கள் மட்டும் என்றில்லாமல், சீன-மலாய் வர்த்தகமும் வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக் குறையால் பொதுவாக பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்தில் இருந்தே அரசு தவறான பாதையைப் பின்பற்றி வருகிறது. இந்தப் பிரச்சினையில் தேவையின்றி முகவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது பெருந்தவறு.

பொதுவாகவே, எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் இடைபுகுந்து கொள்ளை லாபம் அடித்து பயனடைபவர்கள் இந்த இடைத்தரகர்கள்தான்.  காய்கறியை உற்பத்தி செய்பவருக்கு கிடைக்கும் லாபம் சொற்பம்; அதை விற்கும் மொத்த-சில்லறை வியாபாரிகளுக்கு கிடைக்கும் வருமானமும் சொற்பம்தான்; ஆனால், இடைபுகுந்து விவசாயியிடம் இருந்து வாங்கி வியாபாரியிடம் கொடுக்கும் இடைத்தரகர் அடிக்கும் லாபம் அதிகமோ அதிகம்.

அதைப்போல, வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் முகவர்கள் வெளிநாட்டில் மிக அதிகமான தொகையைப் பெற்றுக் கொண்டு, இங்கு வந்ததும் வேலை பெர்மிட், மருத்துவ பரிசோதனை, லெவிக் கட்டணம் எதுவும் இல்லாமல் கடப்பிதழை மட்டும் பறித்துக் கொண்டு எவரோ ஒருவரிடம் அடிமையைப் போல விற்று விடுவர்.

அதிக விலை கொடுத்து அமர்த்திய முதலாளியும் சம்பந்தப்பட்ட தொழிலாளியிடம் முடிந்த வரை வேலை வாங்க முயற்சி செய்வது ஒரு பக்கம்; வெறுப்புடனும் சலிப்புடனும் ஏதோ பொழுது போனால் சரி என்று ஏனோதானோ மனப்பான்மையுடன் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மறுமக்கம் என்றால், சில வேளைகளில் அத்தொழிலாளிகள் ஓடிவிடவும் செய்கின்றனர்.

ஆனால், வெகு அண்மையில் அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. லெவியை முதலாளிகளே செலுத்த வேண்டும்; முகவர்களுக்கு இனி வேலையில்லை என்றெல்லாம் முடிவு எடுத்துள்ளது அரசு.

அநியாயம்

நமது நாட்டில் குறைந்தச் சம்பள கொள்கை படு மோசமாக உள்ளது. ஒரு மாதம் ரிமா 1,000 மட்டும்தான். இந்த நிலையில் நம்மால் உயிர் வாழ முடியுமா?. ஒரு தொழிலாளி 8 மணி நேரம் வேலை செய்தால் அவனுக்கு எளிமையான வகையில் வாழவாவது ஊதியம் போதுமானதாக இருக்க வேண்டும்.

அந்நிய தொழிலாளர்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதால், அதே நிலையில் உள்நாட்டு தொழிலாளர்கள் வேலை செய்ய மறுக்கின்றனர். காரணம், கட்டுபடியாகது. அந்நிய தொழிலாளர்கள் குடும்பதுடன் இல்லை, செலவும் குறைவு, அவர்களின் நாட்டில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளதால் வாயைக் கட்டி வயிற்றை கட்டி பிழைப்பை ஓட்டனும் என்ற நிலைமை. அதோடு வருமானத்தை சேமித்து தாய் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சூழல். அதனால், அவர்கள் அந்த அடிமைத்தனத்தை சகித்து கொண்டு வாழ்கிறார்கள்.

தற்போது நமது நாட்டில் சுமார் 70 இலட்சம் அந்நிய தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 22 இலட்சம் பேர் தான் வேலை செய்வதற்கான போதிய சான்றிதல்கள் உள்ளவர்கள். ( http://www.mtuc.org.my/mtuc-calls-for-freeze-on-recruitment-of-foreign-workers-for-2-years/)

இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி போன்ற நாடுகளில், குறைந்த சம்பளம் என்பது அதிகமாகும். ஓர் ஆசிரியர், மருத்துவர் போன்றவர்களின் ஊதியத்திற்கும் தொழிலாளர்களின் ஊதியத்திற்கும் உள்ள வேறுபாடு இரண்டு அல்லது மூன்று மடங்குதான் இருக்கும். தொழிலாளர்களின் ஊதியம் என்பது வாழ்வாதரத்தை தரமாக வைத்துக் கொள்ள உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மலேசியா செல்வம் கொழிக்கும் நாடு. நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் நமது பொருளாதார கொள்கைகள் அமைய வேண்டும். அதைவிடுத்து பொருள்முதல் வாத அடிப்படையில் பேராசை கொண்டவர்களின் சுயநலத்திற்காக மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகிறது.

நமது நாட்டில் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகமாக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அவற்றை அமுலாக்கம் செய்ய அரசாங்காத்திற்கு ‘தில்லு’ கிடையாது. காரணம், குறைந்த சம்பள கொள்கையை கொண்டு இலாபம் தேடும் முதலாளிகள்தான் அரசாங்கத்தின் முதுகை சொறிந்து விடுபவர்கள்!

எனவே, இலாபம் தேடும் முதலாளிகளுக்கு நியாயமாக படுவது உள்நாட்டில் வாழ்வாதராத்தில் தள்ளாடும் தொழிலாளர்களுக்கு செய்யப்படும் அநியாயமாகும்!

SHARE THIS STORY :    

RELATED POSTS

ID); $tagIDs = array(); if($tags){ $tagcount = count($tags);for($i = 0; $i < $tagcount; $i++){ $tagIDs[$i] = $tags[$i]->term_id; }$args = array( 'tag__in' => $tagIDs,'post__not_in' => array($post->ID), 'showposts'=>5, 'caller_get_posts'=>1); $my_query = new WP_Query($args); if( $my_query->have_posts() ){ while ($my_query->have_posts()) : $my_query->the_post(); ?>

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • Unmai wrote on 8 மார்ச், 2018, 19:32

  ஒரு பெரிய புலம்பல் சத்தம் காதோரமாக கேட்கிறது. அது – மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் புலம்பல். உங்கள் புலம்பல் கேட்பவனுக்கு காதில் நெய் வடிவது போலிருக்கும். அதன் உள்ளே இருக்கும் வலி பாதிக்க பட்டவர்களுக்கே தெரியும். இனியும் உங்கள் புலம்பலையும், கெஞ்சாளையும் கொஞ்சம் பின் நோக்கி பாருங்கள். இந்த நாட்டில் இந்திய தமிழர்கள் அதிகமாக இருகிறார்கள் என்று நினைத்து கொண்டு அவர்கள் இங்கு மலேசியா வேலைக்கு வந்தால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அதிகம். மொழி பிரச்னைகள் இருக்காது என நினைத்து வரும் அவர்கள் அத்துடன் தங்கள் குடும்பங்களையும், சொத்துகளையும் அடமானம் வைத்து இங்கே வந்து வேலை செய்யும் இடங்களில் அவர்கள் படும் துன்பங்களை நாம் பார்த்து இருக்கிறோம். இன்றும்கூட.
  அவர்கள் உணவகங்களில் சுமார் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை சம்பளமோ சரியாக கிடைப்பது இல்லை. என புலம்பல்கள் அவர்களிடம். இத்தனையும் அனுபவித்துக் கொண்டு தன் முதலாளிகள் நல்ல வருமானம் நல்ல வியாபாரம் நடைபெறவேண்டும் என எண்ணி வேலை செய்யும் அந்த தொழிளாளர்கள் படும் துன்பங்களுக்கு உங்கள் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்த தொழிளாளர்கள் சார்பாக.
  சராசரி சுமார் 10 தொழிளாளர்கள் கூப்பிட்டு உங்களின் பிரச்சனைகள் என்ன என்று கேட்டால் அதில் 6 பேர் நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்கிறேன் இங்கு என்று சொல்வார்கள். அவர்களும் மனிதர்கள் தனே. முதலாளிகளுக்கு நல்ல வருமானம் வர வேண்டும் நல்ல வியாபாரம் நடக்க வேண்டும் என எண்ணி வேலை செய்கிறார்கள்.
  இன்று பல இந்திய தமிழ் தொழிளாளர்கள் முடிதிருத்தும் தொழில், தோட்டத்தொழில், உலோக மறுசுழற்சித் தொழில், சில்லறை வணிகம் உள்ளிட்ட தொழில் செய்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற சம்பளம் கிடைபதில்லை. ஒரு பங்களா தேசி இந்த நாட்டில் வாழும் சுக போக வாழ்க்கை நமது தமிழ் இந்திய நாட்டின் சகோதரர்கள் வாழ்கிறார்களா என்றால் கேள்வி குறிகள் நிறைய உள்ளன.
  இதற்கு உங்கள் சங்கம் என்ன சொல்ல வருகிறது. பெயர் அளவுக்கு மட்டும் சங்கம் என்று வைத்து கொண்டால் போதாது. அதற்கு ஏற்றால் போல் உங்கள் சேவைகள் அந்த சகோதர்களுக்கு சேவை மனப்பான்மைகள் உங்கள் மூலம்மாக இருந்தால் அவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உண்மை. தமிழ் நாட்டு பத்திரிகையில் இந்த நாட்டின் முதலாளிகள் செய்த சம்பளம் மோசடிகளை வெளிச்சம்மாக கொண்டு வந்தன. அதற்கு உங்கள் சங்கம் இதுவரையில் என்ன நடவடிக்கைகள் எடுத்தன. நிறைய சொல்லலாம் வேண்டாம் என விடுகிறேன். அவர்கள் செய்யும் ஒரு சில தவறுகளை வைத்து அவர்களின் வயிற்றில் அடிப்பது நல்லது அல்ல. அது சம்பளம் எனும் போர்வையில்.

 • ஜி. மோகன் - கிள்ளான் wrote on 8 மார்ச், 2018, 22:52

  பெரியதாக ஒரு சங்கத்தை வைத்து கொண்டு புலம்புவதை விடுத்து அதற்கான தீர்வு என்ன என்று ஏன் நீங்கள் சிந்திக்க வில்லை. ஏன். மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின்(பிரிமாஸ்) சார்பாக எத்தனை உணவக உரிமையாளர்கள் பதிந்து உள்ளனர் உங்கள் சங்கத்திடம். இவர்களில் எத்தனை தொழிலளர்கள் உணவகத்தில் வேலை செய்கின்றனர். உங்களிடம் முழுமையான கணக்கு ஏதும் இருக்க?
  உங்கள் உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) இவைகள் யாவும் சரியா இருந்தால் அவர்களும் உண்மையாக வேலையும் செய்வார்கள் காரணம் அவர்கள் வேலை செய்யும் முதலாளிகளிடம் ஏற்படும் பிரச்சனைகளை உங்களிடம் நேரடிய கொண்டு வர உதவும்.
  மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) சார்பாக அவர்களின் சம்பளம் முறையாக மாதந்தோறும் அவர்களின் பெயரில் வங்கிகளில் ஒரு கணக்கு திறந்து முறையக செலுத்த ஆவணை செய்யலாம். நீங்களும் அவர்களின் சம்பளம் வங்கியில் சேர்க்க படுகிறதா என கண்காணிக்கலாம். அதோடு வங்கிகள் மூலம்மாக அவர்களின் குடும்பதற்கு நேரடியாக அனுப்பி வைக்க உதவலாம். ஒருகால் அவர்கள் தவறுகள் அல்லது வேறு சில பிரச்சனைகள் இருப்பினும் நீங்களே அவர்களை தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்து விடலாம். இந்த சேவைகளுக்கு எல்லாம் நீங்களும் ஒரு சிறு தொகை வசூலிக்கலாம் இருவரிடம் இருந்து 1. முதலாளி 2. தொழிலாளர் காரணம் உங்களின் சேவைகளுக்காக.
  இந்த மாதிரியான சேவைகள் உங்கள் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின்(பிரிமாஸ்) செய்ய முன் வந்தால் யாருக்கும் பாதிப்பு வராதுன்னு நினைக்கிறேன். இது அரசாங்கத்திடம் முறையாக முனு செய்து இந்த மாதிரியான சேவைகள் செய்தல் என்ன தவறுகள் இருகிறது. நீங்கள் இரு சார்புடைய அதன் முக்கிய மாணவர்களை அழைத்து ஆலோசனைகள் கேட்கலாம். அப்படி அவர்கள் ஒத்து வரவில்லை என்றால் அரசாங்கத்திடம் கொண்டு செல்லலாமே. நன்றி

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: