சிலாங்கூர் நீர் விநியோகத்தில் சதி என்பது ‘போலிச் செய்தி’. மாநிலத்துக்குத் திறமை போதாது: அமைச்சு குற்றச்சாட்டு

எரிபொருள்,  பசுமைத்   தொழில்நுட்பம்,, நீர்வள   அமைச்சு    சிலாங்கூர்  நீர்  விநியோகத்தில்   கீழறுப்பு   வேலைகள்    நிகழ்ந்திருப்பதாகக்   கூறும்   செய்திகள்    எல்லாம்   ‘போலிச்  செய்திகள்’   என்று   வலியுறுத்துகிறது.

நேற்று  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸில்  வெளிவந்த   ஓர்     அறிக்கையில்     அது   ஓர்   “அசிங்கமான  உத்தி”  என்று     குறிப்பிட்ட    அமைச்சின்   தலைமைச்   செயலாளர்  ஜைனி   உஜாங்,   சிலாங்கூர்   அரசுக்கு    அதன்   நீர்  விநியோகத்தைச்   “சரியான  முறையில்   நிர்வகிக்கும்  திறமை  இல்லை”  என்றும்   அதிலிருந்து   கவனத்தைத்   திசை   திருப்பவே   அவ்வாறு    செய்கிறது   என்றும்   கூறினார்.

கீழறுப்பு   வேலையாக  இருக்குமா    என்பதைக்    கண்டறிய    அமைச்சு   புலனாய்வுகள்   மேற்கொண்டதா    என்பதை   ஜைனி   அறிக்கையில்   விவரிக்கவில்லை.

மாறாக,   2017-இல்   மாநிலத்தின்  நீர்  கையிருப்பு   பூஜ்யம்  விழுக்காடாக    இருந்தது    என்றும்  “மாநிலத்தின்   நீர்  பிரச்னைகளுக்கு    மற்றவற்றோடு   அதுவும்   ஒரு   காரணம்”   என்றும்    அவர்    சொன்னார்.

“ஒரு  குழாய்  உடைந்து  போனாலோ   சுத்திகரிப்பு   ஆலைகளில்  பாதிப்பு   என்றாலோ   விழாக்  காலங்களில்  நிகழ்வதைப்போல்  தண்ணீருக்கு     அதிகத்  தேவை   ஏற்பட்டாலோ   சிலாங்கூரின்  சில   பகுதிகளில்   நீர்  விநியோகம்   தடைப்படும்”,  என்றாரவர்.