“என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் அவரைப் பிரதமராக அங்கீகரிக்கவில்லை”

பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சியின் (பெர்சத்து) தலைவர், முஹிட்டின் யாசின், எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாகின் விமர்சனத்தைப் பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார்.

நஜிப்பின் விமர்சனத்தை விட, அவர்களின் (ஹராப்பான்) வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்வதுதான் மிக முக்கியம் என்றார் அவர்.

“பல்வேறு நிலைகளில் ஆன பொது மக்களின் கருத்து இதில் குறிப்பிடத்தக்கது, நான் நஜிப்பின் அறிக்கையைவிட, அவற்றை அதிகம் கவனிக்கிறேன்.

“நான் அவரைப் பிரதமராக அங்கீகரிக்கவில்லை, அவர் எதையும் பேசலாம், நச்சு தேன், மறுசுழற்சி, தர்க்க ரீதியாக இல்லை, என்ன வேண்டுமானாலும்.

“ஆனால், எங்களை முட்டாள் என்றோ, அறிவுஜீவிகள் அல்ல என்றோ, பொருளாதாரத்தை ஆய்வு செய்யக்கூடிய நிபுணர்கள் இல்லை என்றோ கூறி, அவர் எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

“குறைத்து மதிப்பிடாதீர்கள். எனக்கு முக்கியம், அனைத்து தரப்பு இனங்களையும் மதத்தவரையும் சேர்ந்த பொதுவான மக்களால் மறுக்க முடியாத ஒரு தேர்தல் அறிக்கை.

“மக்கள் ஏற்றுக்கொள்வதே முக்கியம், அந்தத் தரப்பினர் குறை சொல்வது சகஜம்தானே,” என புத்ராஜெயாவிலுள்ள பெர்சத்து தலைமையகத்தில் இன்று செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, முஹிடினின் நாடாளுமன்றத் தொகுதியான பகோவில், நஜிப் எதிர்க்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் “நச்சு தேன்” என்று விவரித்தார்.

சிலாங்கூரில் உள்ள நீர் நெருக்கடியைத் தீர்ப்பது உட்பட, மக்களின் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக நஜிப் தெரிவித்தார்.