ஜுஸ்னி மீண்டும் அரசியலுக்குத் திரும்பலாம்

முன்னாள்  நிதி  அமைச்சர்  II  அஹ்மட்   ஹுஸ்னி   ஹனாட்ஸ்லா   மீண்டும்  அரசியலுக்குத்   திரும்பும்   வாய்ப்பு    உள்ளதாகவும்    அவர்   ஆறாவது   தடவையாக   தம்புன்  நாடாளுமன்றத்   தொகுதியில்   களமிறக்கப்படலாம்   என்றும்   ஆருடங்கள்   கூறப்படுவுதாக   சின்  சியு   டெய்லி   அறிவித்துள்ளது.

2016  ஜூனில்   அமைச்சர்  பதவியையும்   அம்னோ  உறுப்பினர்  பதவியையும்  துறந்து  சென்ற  ஹுஸ்னி    மீண்டுக்    அரசியலுக்குத்     திரும்பி  வருவதைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்   விரும்புவதாக   அச்செய்தி  கூறிற்று.

அந்த    66-வயது    மனிதர்   நஜிப்   உயர்வாக   மதிக்கும்   அம்னோ   அரசியல்வாதிகளில்  ஒருவராம்.    பிஎன்   வட்டாரமொன்று    தெரிவித்ததாக    அது   கூறியது.

முன்னாள்   அம்னோ  தலைமைப்  பொருளாளரான   ஹுஸ்னி   2009  ஏப்ரலில்,  நஜிப்   பிரதமரானதும்    இரண்டாம்  நிதி  அமைச்சராக    நியமிக்கப்பட்டார்.

2016  அக்டோபரில்   நாடாளுமன்ற  பட்ஜெட்   விவாதத்தின்போது    சர்ச்சைக்குரிய  1எம்டிபி   தேவைதானா    என்றவர்   கேள்வி   எழுப்பிப்  பரபரப்பூட்டினார்.   எட்டு  மாதங்களுக்குப்  பின்னர்      பதவி  விலகினார்.