1எம்டிபி: சுவீஸ் அரசாங்கம் பறிமுதல் செய்த ரிம430 மில்லியன் மலேசியாவுக்குச் சொந்தமானதல்ல

சுவீஸ்    அதிகாரிகள்  கைப்பற்றிய  CHF104 மில்லியன் (ரிம430மில்லியன்)   மீது  ஏன்  உரிமை  கொண்டாடவில்லை  என்பதற்கு  1எம்டிபி  விளக்கமளித்துள்ளது.

சுவீஸ்    வங்கிகளுடன்      நிகழ்ந்த   சர்ச்சையின்    தொடர்பில்  சுவீஸ்   அரசாங்கம்   அப்பணத்தைப்  பறிமுதல்   செய்தது     என  1எம்டிபி  கூறிற்று.

“பணம்   பறிமுதல்   செய்யப்பட்டதை   எதிர்த்து   சம்பந்தப்பட்ட   வங்கிகள்   மேல்முறையீடு   செய்திருப்பதாக   சுவீஸ்   நிதி   அமைச்சர்   யுலி  மாவ்ரர்   தெரிவித்துள்ளார்.

“ஆக,  சம்பந்தப்பட்ட    வங்கிகள்   CHF104 மில்லியனுக்கு  உரிமை  கொண்டாடி   வழக்கு   தொடுத்திருப்பதால் , 1எம்டிபியோ  மலேசிய   அரசாங்கமோ   அதற்கு  உரிமை  கொண்டாட  முடியாது.  அது  1எம்டிபிக்குச்  சொந்தமானதல்ல”,  என்று   அதன்   அறிக்கை  கூறியது.