நஸ்ரி: ரயிஸுக்கும் ரபிடாவுக்கும் அரசாங்கத்தின்மீது அதிருப்தி

முன்னாள்  அமைச்சர்கள்  ரயிஸ்   யாத்திமுக்கும்   ரபிடா   அசிசுக்கும்   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்   தலைமையிலான    இப்போதைய   அரசாங்கத்தின்மீது    வெறுப்பு,  அதுதான்  இப்படியெல்லாம்  பேசுகிறார்கள்   என்று  சுற்றுலா,  பண்பாடு   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்  அசீஸ்  நினைக்கிறார்.

அவ்விருவரும்,   ஆடம்பர  படகான   ஈக்குவேனிமிடியை  அமெரிக்க   புலனாய்வுத்துறையும்  இந்தோனேசிய    அதிகாரிகளும்    கைப்பற்றியதன்    தொடர்பில்   அரசாங்கத்தைக்  குறைகூறி  வருவது   பற்றி  நஸ்ரி  கருத்துரைத்தார்.

“தேர்தல்  வருகிறது.  இவர்கள்  எல்லாம்  அதிருப்தியுற்ற  மக்கள்.

“பத்தாண்டுகளுக்குமேல்   அமைச்சராக   இருந்த  ஒருவருக்குத்  தேர்தலில்    இடம்  கொடுக்கவில்லை   என்றால்  வெறுப்பு   வரத்தான்  செய்யும்.  போன  தேர்தலிலேயே  இடம்  கொடுக்கப்படவில்லை  என்றாலும்  வெறுப்பு  இருக்கவே  செய்யும்.

“இப்போதைய     தலைமைக்கு    எதிராக   அவர்கள்  வெறுப்பை  இன்னும்  வைத்துக்  கொண்டிருக்கிறார்கள். குறைசொல்லியாவது   வெறுப்பைத்  தீர்த்துக்கொள்ளட்டும்”,  என்று  நஸ்ரி  கூறினார்.