முதலில் 1எம்டிபிமீதான கேள்விகளுக்குப் பதில் , பிறகுதான் மன்னிப்பு: டிஏபி எம்பிகள் திட்டவட்டம்

நாடாளுமன்றத்தை   அவமதித்ததற்காக  கடும்  நடவடிக்கை   எடுக்கப்படலாம்   என்று    எச்சரிக்கப்பட்டிருந்தாலும்   அதற்காக  டிஏபி   எம்பிகள்  மூவரும்   மன்னிப்பு   கேட்கத்   தயாராக  இல்லை.

பத்து காஜா  எம்பி   வி.சிவகுமார்,  புருவாஸ்  எம்பி   ங்கே   கூ  ஹாம்,  தைப்பிங்  எம்பி    ங்கா   கொர்  மிங்    ஆகிய   மூவரும்        மன்னிப்பு   கேட்பதற்குமுன்      1எம்டிபிமீதான   தங்களின்   இரண்டு   கேள்விகளுக்கு   மக்களவைத்   தலைவர்   பண்டிகார்  அமின்    மூலியா    பதிலளிக்க   வேண்டும்   என்கிறார்கள்.

எப்போது     மன்னிப்பு      கேட்கப்போகிறார்கள்   என்று    கேட்டதற்கு     ங்கா  “எங்கள்   கேள்விகளுக்கு   அவைத்   தலைவர்  பதிலளிப்பதற்காகக்  காத்திருக்கிறோம்”  என்றார்.

1எம்டிபி -இல்   தவறுகள்   எதுவும்    நிகழவில்லை    என்றால்   அதன்  தணிக்கை  அறிக்கையை       நாடாளுமன்றத்தில்    தாக்கல்     செய்யாதது  ஏன்,    1எம்டிபி   ஊழல்  மீது    வெளிநாடுகள்   நடவடிக்கை   எடுக்கும்போது  அரசாங்கம்  மெளனம்   காப்பது   ஏன்   என்பவைதான்   அவ்விரண்டு   கேள்விகளாகும்   என்றாரவர்.

நேற்று   அம்மூவருக்கும்   பண்டிகாரிடமிருந்து    கடிதம்    வந்திருந்தது.  மன்னிப்பு   கேட்காவிட்டால்   நடவடிக்கையை    எதிர்நோக்க  வேண்டியிருக்கும்   என்று  அதில்   எச்சரிக்கப்பட்டிருந்தது.