ஜிஇ14-இல் பினாங்கில் பல புதுமுகங்கள் களமிறக்கப்படுவர்

நெருங்கி  வரும்  14வது  பொதுத்   தேர்தலுக்கான  வேட்பாளர்களை     முடிவு   செய்யும்   பணிகளில்   ஆளும்  கட்சியும்  எதிரணியும்   ஈடுபட்டிருக்கும்   வேளையில்   பினாங்கில்   டிஏபியும்  பிகேஆரும்  பல   புதுமுகங்களைக்  களமிறக்கப்  போவதாக    ஆருடங்கள்    கூறப்பட்டுள்ளன.

கடந்த   மார்ச்  11-இல்  பினாங்கில்   பக்கத்தான்  ஹரப்பான்   ஆட்சியின்  பத்தாமாண்டு   விழாவில்,  பொதுத்   தேர்தலில்    டிஏபி  19 இடங்களிலும்,  பிகேஆர்  14  இடங்களிலும்   அமனா   மூன்றிலும்,  பெர்சத்து   நான்கிலும்   போட்டியிடப்போவதாக     அறிவிக்கப்பட்டது.

இம்முறை  டிஏபி   களமிறக்கும்  வேட்பாளர்களில்   குறைந்தது   எண்மர்  புதுமுகங்களாக   இருப்பார்களாம்.

அவர்களில்  ஒருவர்,    இப்போது  பினாங்கு   மாநகராட்சி  மன்ற     கவுன்சிலர்  ஷேர்லீனா   அப்துல்     ரஷிட்   என்று    கூறப்படுகிறது.  அவர்   புக்கிட்   பெண்டேரா    நாடாளுமன்ற  தொகுதியில்   போட்டியிடுவார். இப்போது   அத்தொகுதியை   வைத்துள்ள   ஸகிரில்  கீர்  ஜோகாரி  அதை   விட்டுக்கொடுத்துவிட்டு   சட்டமன்றத்துக்குப்   போட்டியிடுவார். அவர்  தஞ்சோங்  பூங்காவில்   போட்டியிடுவார்    என்று    தெரிகிறது.