தமிழ் ராக்கர்ஸ் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவையே அச்சுறுத்தும் ஒரு விஷயம் தான் இந்த பைரசி. இதற்கு பல தளங்கள் இருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் தான் மிக முக்கியமாக உள்ளது.

இதை தடுக்க பலமுறை முயற்சி செய்தும் தோல்வி தான், இதன் அட்மின்களை மட்டும் தான் கைது செய்ய முடிகின்றதே தவிர, இதை நடத்துபவரை கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இதுக்குறித்து சில ஹாக்கர்களே கூறும் போது ‘தமிழ் ராக்கர்ஸை எங்களால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.

ஏனெனில் அவர்கள் தங்கள் Domain-யை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள், எங்களால் முடிந்த அளவிற்கு 1 நாள் அல்லது 2 நாள் வரை அவர்களை தடுத்து நிறுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

இது கண்டிப்பாக சினிமாவை நேசிப்பவர்களுக்கு அதிர்ச்சியாக செய்தி தான்.

-cineulagam.com