தி எக்கோனோமிஸ்டுக்கு ஆத்திரப்பட்டு கடிதங்கள் எழுதுவது மட்டும் போதாது – சட்ட வல்லுனர்

தி  எக்கோனோமிஸ்ட்  பத்திரிகை   பிரதமர்    நஜிப்    அப்துல்  ரசாக்மீது   சுமத்திய     குற்றச்சாட்டுகளுக்கு   புத்ரா  ஜெயா      பட்டும்படாமலும்  பதிலளித்திருப்பது   மலேசியாவிடம்      எதிர்வாதம்  செய்ய   போதுமான   சரக்கில்லை    என்பதைக்  காண்பிப்பதாய்   சட்ட   வல்லுனர்  அப்துல்   அசீஸ்  பாரி   கூறினார்.

தி  எக்கோனோமிஸ்டுக்குக்  கடிதம்   எழுத   யுகே-க்கான   மலேசியாவின்  உயர்   ஆணையரைப்  பணிப்பதைவிட    அப்பத்திரிக்கைக்கு  எதிராக    அவதூறு   வழக்கு   தொடுப்பதே    சரியான  பதிலடியாக   அமையும்  என்றாரவர்.

“இதுபோன்ற    நிலைமைகளில்     ஒரு    அரசாங்கம்    செய்யக்கூடிய   சரியான   நடவடிக்கை    என்னவென்றால்    ஆசிரியருக்கான  கடிதம்   பகுதியில்   கடிதங்கள்  மூலமாக     ஆத்திரத்தை   வெளிப்படுத்துவதைவிட   பத்திரிகைக்கு   எதிராக   வழக்கு   தொடுப்பதுதான்.

“அதைச்   செய்யாதது   எதிர்த்து   வாதம்  செய்ய  நம்மிடம்   போதுமான    சரக்கில்லை    என்பதைக்   காண்பிப்பதுபோல்   இருக்கிறது”,  என்றவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.