இஜோக் நில மோசடி : எம்ஏசிசி ஒரு ‘டத்தோ’ உட்பட, அறுவரைக் கைது செய்தது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சிலாங்கூர், மூக்கிம் இஜோக்கில் மாநில அரசுக்குச் சொந்தமான நில விற்பனை வழக்கு விசாரணைக்கு உதவ, ஒரு ‘டத்தோ’ உட்பட ஆறு நபர்களை இன்று கைதுசெய்தது.

அனைத்து சந்தேக நபர்களும் இன்று மதியம் 12.45 முதல் மாலை 4 மணி வரையில், பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா எம்ஏசிசி தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர், சுல்கிப்ளி அஹ்மாட் கூறினார்.

“அவர்களில் ஒரு தந்தையும் மகனும் அடங்குவர்.

5 நிறுவனங்களுக்கு, RM200 மில்லியன் – RM68 மில்லியன், RM62 மில்லியன், RM42 மில்லியன், RM16.5 மில்லியன் மற்றும் RM8.5 மில்லியன் பெறுமானம் கொண்ட பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று இன்று மலாக்காவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

அவர்கள் 34 வயதிலிருந்து 84 வயதுக்குட்பட்டவர்கள்.

விசாரணைக்கு உதவ, மூன்று நிறுவனங்களிடமிருந்து பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக சுல்கிப்ளி கூறினார்.