ரஜினி டென்ஷனான இமயமலைக்கு போய்டலாமா, எதுக்கு இந்த வயதில் அரசியல் – முன்னாள் பா.ஜ.க பிரமுகர் தாக்கு !

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று தமிழக அரசியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கவுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்து வரும் வேளையில் முன்னாள் பா.ஜ.க மகளிர் அணி தலைவி ஜமீலாவும் விமர்சித்துள்ளார்.

அவர் பேசுகையில், ரஜினி முதலில் தனித்துவமான அரசியல்வாதியாக வரவேண்டும், இத்தனை காலகட்டத்துக்கு பிறகு அவர் அரசியலுக்கு வரும் நிலையில் டென்ஷனான உடனே இமயமலைக்கு சென்றுவிடுகிறார். பின்பு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

அன்றாட அரசியல் நிகழ்வுகளை பற்றி பேசமாட்டேன்னு சொல்றாரு, நான் குளத்துல குதிக்கல, நான் நீந்தும் போது தான் நீந்துவேன்னு சொல்றாரு, நாடே பற்றி எரியும் போது நான் இன்னும் அரசியலுக்கு வரலங்க, வரும்போது தான் பேசுவேன்னு சொன்னா எப்படிங்க மக்கள் ஏற்பார்கள்.

சினிமா வேறு, அரசியல் வேறு, நாட்டை ஆள வேண்டும் என்றால் நல்ல தலைவனுக்குரிய தகுதிகள் மக்கள் எதிர்பார்ப்பது மிகமிக அதிகம், வெற்றிடம் இருக்கிறது என்று சினிமா பாணியில் பேசுகிறார்.

வயசான காலத்தில் எதுக்கு இவர்களுக்கு முதல்வர் ஆசை, இங்கு நல்ல தலைவர்களே இல்லையா, 25 ஆண்டு காலமாக ஒதுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் போராடி வருகிறார். அவரை பார்த்தால் நல்ல தலைவராக தெரியவில்லையா. இந்த சினிமா நடிகர்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

-cineulagam.com