ஜொகாரி: எந்த நாடும் ஜிஎஸ்டியை இரத்துச் செய்ததில்லை

பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)   அமல்படுத்தப்பட்ட    நாடுகளில்    அரசாங்கங்கள்   மாறியபோதும்   ஜிஎஸ்டி  இரத்துச்   செய்யப்பட்டதில்லை   என  இரண்டாம்  நிலை   நிதி  அமைச்சர்   ஜொகாரி  அப்துல்  கனி  இன்று   கூறினார்.

முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்  தம்முடைய    ஆட்சியில்  மலேசியப்  பொருளாதாரம்  “ஆசியப்  புலி”   ஆக  மாறுவதற்கு   ஜிஎஸ்டி   தேவைப்பட்டதில்லை    என்று   கூறியிருப்பதற்கு   அமைச்சர்   இவ்வாறு   பதிலளித்துள்ளார்.

ஒரு   நாட்டின்   மூலதனப்     பெருக்கத்திற்கு   ஜிஎஸ்டி   பெரிதும்   உதவக்கூடிய   வரி  என்று  ஜொகாரி   தற்காத்துப்  பேசினார். 174  நாடுகள்   அதை  அமல்படுத்தியுள்ளன.  அமல்படுத்திய    எந்த   நாடும்   அதை  மீட்டுக்கொண்டதில்லை.

“சில   நாடுகளில்   அரசாங்கங்கள்  மாறியபோதும்  புதிய   அரசாங்கம்   ஜிஎஸ்டியை   இரத்துச்   செய்யவில்லை”,  என்றாரவர்.