ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம்

சென்னை,

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி நேற்று வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்  வலுத்து வருகிறது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்குப்பட்டு வருகின்றது.

-dailythanthi.com

 

TAGS: