பங்களா-கேட் விவகாரம்: இன்று விசாரணை தொடங்கியது

பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்  எங்,  இரு-மாடி   பங்களா    வாங்கிய  விவகாரம்மீதான   வழக்கு   இன்று  பினாங்கு   உயர்  நீதிமன்றத்தில்   விசாரணைக்கு     வந்தது.

பினாங்கு  முதலமைச்சர்    ஒருவர்மீது    ஊழல்  வழக்கு    தொடரப்படுவது   இதுவே  முதல்முறை   என்பதால்   இவ்வழக்கு  மிகுந்த  பரபரப்பை    ஏற்படுத்தியுள்ளது.

வழக்குவிசாரணை   23  நாள்களுக்கு   மே  இறுதிவரை   நீடிக்கும்    என   எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்துக்கு   வெளியில்    செய்தியாளர்களிடம்   பேசிய    பிகேஆரின்   பாலேக்   பூலாவ்  எம்பி   யுஸ்மாடி   யூசுப்,  அரசுத்தரப்பு  நடந்துகொள்ளும்  விதம்  குறித்து   கேள்வி    எழுப்பினார்.

“குவான்  எங்குக்கு  முதலமைச்சர்   பணிகளைச்   செய்வதற்கான  ஜனநாயக   உரிமைகள்  மறுக்கப்படக்  கூடாது,  அதுவும்  பொதுத்   தேர்தல்   நெருங்கி  வரும்   வேளையில்.

“வழக்கை   நடத்த  அவசரம்  காட்டப்பட    வேண்டிய   அவசியம்  இல்லையே”,  என்றார்.

விசாரணையை   ஐந்து   வாரங்களுக்குத்   தொடர்ச்சியாக     நடத்தத்   திட்டமிட்டிருப்பது   ஏனென்றும்    வினவினார்.