பொய்ச் செய்திகளுக்கு ரிம500ஆயிரம் தண்டம், 10 ஆண்டுச் சிறை

இன்று   நாடாளுமன்றத்தில்   தாக்கல்   செய்யப்பட்ட   பொய்ச்  செய்தித்   தடுப்புச்   சட்டவரைவு   “பொய்ச்  செய்திகள்”   பரப்புவோருக்கு  ரிம500,000   வரை  அபராதம்  அல்லது  பத்தாண்டுச்   சிறை  அல்லது   இரண்டும்     சேர்த்து    விதிக்க  வகை   செய்கிறது.

“செய்திகளோ,  தகவல்களோ,  தரவுகளோ,  அறிக்கைகளோ  அவை  கட்டுரைகளாகவோ  காணொளிகளாகவோ,  ஒலிப்பதிவுகளாகவோ   அல்லது   வேறு   எந்த   வகையினதாக    இருந்தாலும்,   முழுவதும்   பொய்யானதாக   இருந்தாலும்  அல்லது  பகுதி   பொய்யானதாக   இருந்தாலும்”     அவை  “பொய்ச்  செய்திகள்”  எனக்  கருதப்படும்   என    அச்சட்டவரைவு   கூறுகிறது.

“பொய்  செய்திகள்”  தயாரிப்புக்கு   நிதியுதவி  செய்வோருக்கும்   உடந்தையாக  இருப்போருக்கும்  இதே  தண்டனைதான்.