’சர்வதேசத்துக்கு அடிப்பணிந்துவிட்டது அரசாங்கம்’ என்கிறார் பீரிஸ்

சர்வதேச சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணிந்து, பாதுபாப்புப் படையினரை வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய, தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் அமைச்சரும் பேரராசிரியருமான ஜு.எல்.பீரிஸ், அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும்  குற்றம் சாட்டினார்.

பத்தரமுல்லையில், இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில், எதிர்வரும் 4ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுதவற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பு படையினரை வெளிநாட்டு நீதிபதிகள் குழாமைக் கொண்டு விசாரணை செய்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் ஶ்ரீலங்ககா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானவை.

இந்த அரசாங்கத்திற்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் சர்வதேசத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணிந்து மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்வதே. இதற்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவை வழங்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

-tamilmirror.lk

TAGS: