பழங்குடியின மக்கள் பட்ட துயரங்களுக்கு, மன்னிப்பு கோரிய கனடா பிரதமர் !

பிரிட்டிஷ் கொலம்பிய காலணித்துவ அரசினால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடியின தலைவர்கள் 6 பேர் தூக்கிலடப்பட்ட சம்பவத்திற்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார்.

பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு தீர்வுகளை வழங்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயற்படுத்தி வருகின்ற பிரதமர் இச்சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த 1864ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியின் கீழ் வெள்ளையின விதி அமைப்பு அதிகாரிகளுடன் முரண்பட்டதாக தெரிவித்து இந்த ஆறு பழங்குடியின தலைவர்களும் தூக்கிலடப்பட்டனர்.

குறித்த பழங்குடியின மக்களே அந்த பிராந்தியத்திற்கு முதலில் வந்து வசித்துவந்த நிலையில் புதிதாக தங்கத்தை தேடி அங்கு வந்தவர்களால் பழங்குடியினரிடம் அனுமதி கோரப்படவில்லை. அத்தோடு அவர்களின் உரிமையும் மதிக்கப்படவில்லை.

தற்போது குறித்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோருகின்ற போதிலும் கடந்த காலத்தில் இடைக்கபட்ட அநீதிகளுக்கு இந்த மன்னிப்பு பரிகாரமாக அமைந்து விடாது. இந்நிலையில் பழங்குடியின மக்களுடனான மீள் நல்லிணக்கம் ஏற்படுத்ப்பட்டு அவர்களுடனான உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.