பெர்சே மற்றும் சுவாராம் அலுவலகத்தில் போலீஸ்

இன்று  காலை   பெட்டாலிங்  ஜெயாவில்   உள்ள   பெர்சே   மற்றும்   மனித  உரிமைக்  குழுவான   சுவாராம்  அலுவலகத்துக்கு   போலீஸ்   அதிகாரிகள்  வந்தனர்.

அவர்கள்   நேற்று   நாடாளுமன்றத்துக்கு   வெளியில்    நடந்த  கண்டனக்  கூட்டம்  தொடர்பில்   வாக்குமூலம்   பதிவு   செய்வதற்கு  வந்ததாக  அறியப்படுகிறது.

பெர்சே  இடைக்காலத்  தலைவர்    ஷாருல்   அமான்   முகம்மட்  சாஅரி,  நிர்வாக   இயக்குனர்   யாப்  ஸ்வீ   செங்,  இயக்கக்  குழு  உறுப்பினர்   மந்திப்   சிங்   ஆகியோரையும்   சுவாராம்  ஒருங்கிணைப்பாளர்   அமிர்   அப்துல்  ஹாடியையும்   அவர்கள்   விசாரிக்க  விரும்பினார்கள்.

சிறிது  நேரம்  பேச்சு    நடத்திய   பின்னர்    அந்நால்வரும்   பின்னொரு   நாளில்  டாங்  வாங்கி   போலீஸ்   நிலையம்   வந்து  வாக்குமூலம்   கொடுப்பதாகக்  கூற   அப்படியே   செய்யச்  சொல்லிவிட்டுப்  போலீசார்   திரும்பிச்  சென்றனர்.