ஜிஇ14இன்போது குழப்பம் விளைவிக்கக்கூடிய மேலும் பலரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார்

போலீசார்   14வது  பொதுத்  தேர்தலின்போது    “கடைசிநேரத்  திடீர்  தாக்குதல்   நடத்தி”க்  குழப்பம்  விளைவிக்கக்கூடிய   தனிப்பட்டவர்களையும்   அமைப்புகளையும்   அடையாளம்  காண   தொடர்ந்து   ஆய்வுகள்  செய்து   வருகின்றனர்.

இதுவரை  அப்படிப்பட்ட   1,100  தனிப்பட்டவர்களும்   அமைப்புகளும்    அடையாளம்   காணப்பட்டிருப்பதாக  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ் (ஐஜிபி)  பூசி  ஹருன்   கூறினார்.

இது  தேசிய  பாதுகாப்பு   தொடர்பான  விசயம்   என்பதால்  தரவுகள்  தொடர்ந்து   இற்றைப்படுத்தப்பட்டு   வருவதாக   அவர்   சொன்னார்.

நேற்று  நாடாளுமன்றத்துக்கு   வெளியில்    பேரணி   குறித்துக்  குறிப்பிட்ட   பூசி,  அதில்   ஈடுபட்டவர்கள்மீது   போலீஸ்    அமைதிப்  பேரணிச்   சட்டத்தின்கீழ்  நடவடிக்கை    எடுக்கும்    என்றார்.

“பேரணி  நடத்த   அனுமதி   பெறப்படவில்லை.  போலீஸ்   நடவடிக்கை   எடுத்து   சம்பந்தப்பட்டவர்களிடம்   வாக்குமூலம்   பதிவு   செய்யும்.  அதன்  தொடர்பில்  இதுவரை   யாரும்  கைது    செய்யப்படவில்லை”,  என்றும்   அவர்   சொன்னார்