2019இல் ஜெனிவாவுக்கான கதவுகளை மூடுகிறது சிறிலங்கா

ஜெனிவாவுக்கான கதவுகளை மூட விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறப்புப் பணிகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம,

”நாம் தொடர்ந்து ஜெனிவாவுக்குச் செல்வதை விரும்பவில்லை. அதனை மூடுவதற்கு விரும்புகிறோம்.

நாங்கள் சில சாதகமான முடிவுகளை எடுத்திருக்கிறோம். நீதிமன்ற முறைமைகள் சுதந்திரமாக உள்ளன.

எனவே, போர்க்கால மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. இதனை ஜெனிவாவிலும் கூறியிருக்கிறோம்.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜெனிவாவுக்கு செல்வதை அரசாங்கம் விரும்பவில்லை.

இதனை, தாம் பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகளுக்கு விளக்கிக் கூறுமாறு, வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்த வேண்டும்.

எமது பிரச்சினையை எம்மாலேயே தீர்க்க முடியும். வெளியில் இருந்து யாரும் தலையீடு செய்ய வேண்டியதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: