நல்லாட்சி அரசால் மீண்டும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப்புலிகள்! கொதிக்கும் தமிழர்கள்..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் உள்ள 20 அமைப்புக்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் கடந்த 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், ஆகியோரின் இராஜதந்திரமுயற்சிகளின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பியஒன்றியம் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் முதல் முறையாக இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

-athirvu.com

TAGS: