பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுக்கு எதிரான மகஜர்கள் அரசாங்கத்திடம் தாக்கல்

பொய்ச் செய்தித்  தடுப்புச்  சட்டவரைவைத்  தடுத்தும்   கடைசி   முயற்சியாக   11ஆயிரத்துக்கு   மேற்பட்ட   கையெழுத்துகள்   அடங்கிய    இரண்டு   மகஜர்கள்   நேற்றிரவு    பிரதமர்துறையிடம்  ஒப்படைக்கப்பட்டன.

அரசாங்கமே  அச்சட்டவரைவைக்  கைவிட்டாலொழிய     அது  இன்று  பின்னேரம்    மக்களவையில்   விவாதிக்கப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்படுவது   உறுதி.

அவ்விரு   மகஜர்களையும்   கொண்டு  வந்த    அமைப்புகள்     அலிரானும்  யுனைடெட்  கிங்டம்  மற்றும்   ஐரி   மலேசிய   சட்டத்துறை   மாணவர்   சங்கமும் ஆகும்.

“11ஆயிரத்தும்      மேற்பட்ட     கையொப்பங்களைக்  கொண்ட    இரண்டு   மகஜர்களும்  இரவு   பிரதமர்துறை   அலுவலகத்துக்கு  மின்னஞ்சல்   செய்யப்பட்டன.  அவற்றின்  நகல்   பிரதமர்துறை   அமைச்சர்   அஸலினா   ஒத்மான்  சைட்டுக்கு   அனுப்பட்டது”,  என  அலிரான்   அதன்  வலைப்பக்கத்தில்    தெரிவித்தது.