முக்ரிஸ்: டாக்டர் எம். முதியவர்தான், ஆனால் பெர்சத்து இளமை முகமாகத்தான் விளங்கும்

பெர்சத்து  துணைத்   தலைவர்   முக்ரிஸ்   மகாதிர்,  தம்  தந்தையும்   கட்சித்   தலைவருமான   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   வயதானவராக   இருக்கலாம்    ஆனால்,  கட்சி    வரும்  பொதுத்  தேர்தலில்    அதன்   இளைய  உறுப்பினர்கள்மீதுதான்   கவனம்   செலுத்த  வேண்டும்   என்று  விரும்புகிறார்.

ஃப்ரி  மலேசியா  டூடே-க்கு   அளித்த   நேர்காணல்   ஒன்றில்,  பெர்சத்துக்  கட்சியின்   அடிநிலை  உற்ஃபுப்பினர்கள்   பெரும்பாலும்   இளைஞர்கள்தான்   என்பதை   முக்ரிஸ்   சுட்டிக்காட்டினார்.

“92  வயதானவர்   அவைத்   தலைவராக  இருக்கிறார்.  ஆனால்,  எங்கள்   அடிநிலை  உறுப்பினர்களைப்   பார்த்தீர்களென்றால்   எல்லாம்   இளைஞர்கள்”,  என்றவர்   சொன்னார்.

பெர்சத்து    வேட்பாளர்களில்   பெரும்பாலோர்   இந்த   இளைஞர்    அணியைச்   சேர்ந்தவர்களாக  இருக்க   வேண்டும்   என்பதுதான்  முக்ரிஸின்   விருப்பமாகும்.