மகாதிர்: ஹரப்பான் வெற்றிபெற 85 விழுக்காட்டினர் வாக்களிக்க வர வேண்டும்

வாக்காளர்கள்   பெரும்   எண்ணிக்கையில்   வாக்களிக்க    வந்தால்  மட்டுமே   எதிர்வரும்   பொதுத்    தேர்தலில்   பக்கத்தான்   ஹரப்பானால்   வெற்றிபெற  முடியும்  என்கிறார்  பக்கத்தான்  ஹரப்பான்   தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்.

“85 விழுக்காட்டுக்குக்  குறையாமல்  வாக்களிக்க   வ்ர  வேண்டும்”,  என  முன்னாள்   பிரதமர்  இன்று   பிற்பகல்    அவரது  வலைப்பதிவில்    பதிவிட்டிருந்தார்.

அது  ஒன்றும்   அடைய  முடியாத  இலக்கல்ல  என்று   நம்பும்   மகாதிர்,   கடந்த   பொதுத்    தேர்தலில்  84.8  விழுக்காட்டினர்    வாக்களித்துள்ளதைச்   சுட்டினார்.

“மலாய்  சுனாமி  ஒன்று  தேவை,  அது   நடக்கும்”,  என்றாரவர்.

பெரும்  பெரும்பானமையில்   வெற்றி  பெறுவதும்   அவசியம்    என்றாரவர்.

“சிறிய   பெரும்பான்மை என்றால்  பிஎன்   தேர்தல்  பணிகளில்  ஈடுபடும்    அரசு   அதிகாரிகள்  மூலமாக   வாக்குகளைத்  திணித்து  இட்டு  நிரப்பி  விடும்”,  என்றார்.

வாக்குகளை  மறுபடி  மறுபடி   எண்ணும்போது  பல   தில்லுமுள்ளுகள்   நிகழலாம்.  அஞ்சல்  வாக்குகளை  வைத்து   மோசடி    செய்வார்கள்  என்றவர்  குற்றஞ்சாட்டினார்.