மகாதிர் சுவரொட்டிக்குத் தடை: தேர்தல் நெருங்கிவர பிஎன்னுக்குப் பயம் வந்து விட்டதா?

சுவரொட்டிகளில்  மகாதிர்  படத்துக்கு  இசி   தடை  போடுகிறதாம்,  ஹரப்பான்  கூறுகிறது

குவெக்:  எதிர்க்கட்சிகள்  அடங்கிய   பக்கத்தான்  ஹரப்பான்   கிட்டத்தட்ட  மூன்றாண்டுகளாக  இருந்து   வருகிறது.  இப்போது   அது   அனைவரும்   அறிந்த  பெயராகி   விட்டது.  வரும்  ஜிஇ 14-இல்   அரசாங்கத்தைக்  கைப்பற்றவும்   தயாராகி  வருகிறது.

அதிகாரத்தில்   உள்ளவர்கள் – அதைப்  பதிவு  செய்ய  மறுக்கும்  சங்கப்   பதிவகம்  உள்பட-   என்ன    செய்தாலும்  இந்த   உண்மையை   மறுக்க   முடியாது.

தேர்தல்   சுவரொட்டிகளில்    எந்தப்  படம்  இருக்கலாம்  எது   இருக்கக்கூடாது    என்று  சொல்லும்   சட்டம்  எதுவுமில்லை.

கட்சியின்  இப்போதைய  தலைவர்கள்  அல்லது   வருங்கால  அரசாங்கத்  தலைவர்களின்   படங்களைப்  போடுவதில்   என்ன   தப்பு?

வாக்களிப்பு   நாள்  நெருங்கிவர  நெருங்கிவர,  பயந்து  போயிருக்கும்  அம்னோ/பிஎன்னிடமிருந்து  இப்படிப்பட்ட    முறைகேடுகளை  நிறையவே  எதிர்பார்க்கலாம்.

அந்நிலையைச்   சமாளிக்க    ஒரு  வழக்குரைஞர்  குழுவை  வைத்துக்கொள்வது   நல்லது.

என் கருத்து:   பக்கத்தான்    ஹரப்பான்     தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகமட்டின்   படம்  இருக்கிறதோ   இல்லையோ,   அவரையும்    அவரது   கட்சியையும்   வாக்காளர்கள்    அறிவர்.

பல்வேறு   அரசுத்  துறைகளும்  வரிந்து  கட்டிக்கொண்டு  எதிரணியை  ஒடுக்குவதற்கு   மேற்கொள்ளும்   முயற்சிகள்  வாக்காளர்களின்   மன உறுதிப்பாட்டை  மேலும்   வலுப்படுத்தும்   என்பதுடன்  அந்தப்  பக்கமும்  இல்லாமல்  இந்தப்  பக்கமும்  இல்லாமல்   மதில்மேல்   பூனைபோல்   இருக்கிறார்களே   அவர்களின் மனத்தையும்   மாற்றி  விடும்.

பேசாய்கொங்:  கோழைகளே,  தேர்தல்கள்  ஜனநாயக  முறைப்படி   நடக்க  வேண்டியவை. நேர்   நின்று  நியாயமான  முறையில்  போட்டியிடுங்கள்.

பயந்துபோய்  தேவையில்லாத   கட்டுப்பாடுகளை   விதிப்பது  ஏன்?

பயம்   என்றால்  தேர்தலை  நடத்த  வேண்டியதே  இல்லையே.  சீனா    அண்மையில்   செய்ததுபோல்   இப்போது   இருப்பவரையே   ஆயுள்கால   அதிபராக்கி  விடலாமே. பணம்,  நேரம்  மிச்சமாகும்.

உலகில் உள்ள   மற்றவர்கள்   நம்மை  ஓர்   உண்மையான   ஜனநாயக  நாடாக   மதிக்க   வேண்டுமானால்   கட்டுப்பாடற்ற,  நியாயமான   தேர்தல்கள்   தேவை.

பாக்சிக்:   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்  14வது   பொதுத்   தேர்தலில்  நிறைய   ஏமாற்று  வேலைகள்   செய்வார்கள்  என்று   ஏற்கனவே  ஆருடம்   கூறினார். அவர்  சொன்னது   உண்மைதான்  போலும்.

ஹரப்பான்   தலைவர்கள்   சொந்த  மாநிலங்களுக்குத்   திரும்பி   அங்கு  ஒவ்வொரு   கிராமத்துக்கும்   சென்று   அங்குள்ள   மூத்தோரிடம்  மகாதிரும்  அன்வாரும்    இப்போது   அம்னோவையும்  பாஸையும்     எதிர்ப்பது    ஏனென்று  விளக்கிக்கூற   வேண்டும்.

அவர்கள்   பிகேஆர்,  பெர்சத்து,  டிஏபி,  அமனா  தலைவர்களின்   படங்களையும்   உடன்   கொண்டுசென்று   அவர்கள்  அனைவரும்  ஒன்றுபட்டிருப்பதையும்   எடுத்துரைக்க   வேண்டும்.

எர்கோ  சம்:  ஒரு  படம்  ஆயிரம்  சொற்களுக்குச்   சமம்  என்றால்  அது  ஆயிரம்  வாக்குகளுக்கும்   சமமாகலாம்.

கன்கோங்:  இசி  அம்னோவின்  வெற்றிக்காக   கடுமையாகப்  பாடுபடுகிறதுபோல்   தெரிகிறது.

முதலில்   தேர்தல்   தொகுதி  சீரமைப்பு,  இப்போது   இது.

அடுத்து   என்ன    செய்வார்களோ, பார்ப்பதற்கு   ஆவலாக  உள்ளது.

சினான்  பெலாவான்:  மகாதிரை   அவரது  வினையே    திரும்பி  வந்து  தாக்குகிறது.   அவர்  பிரதமராக   இருந்த  காலத்தில்   என்ஜிஓ- களால்   சங்கப்  பதிவகத்தில்   பதிவுபெற   முடியாது.   அவற்றுக்குக்  கூட்டம்  நடத்த   மண்டபங்கள்  கிடைக்காது.   மண்டப   உரிமையாளர்கள்   மகாதிர்   நடவடிக்கை   எடுப்பார்   என்று   அஞ்சி  இடம்  கொடுக்க  மாட்டார்கள்.

பிரெட்சல்:  சுவரொட்டி  எதற்கு?  மகாதிர்  படத்தை   டி- சட்டைகளில்  பதித்து,   ஆதரவாளர்களை  அந்த    டி- சட்டைகள்   அணிந்து    நடமாட    விடலாம். ஒரே  இடத்தில்   நிலையாக  இருக்கும்   சுவரொட்டிகளை  விட  இது   மேலும்  பயனுள்ளதாக   இருக்கும்.  யாராலும்  இதைக்  கிழித்தெறிய   முடியாது.