தொடர் ஆக்கிரமிப்புகளுக்கு வடமாகாண சபையின் தவறே காரணம்

வடக்கு மாகாண சபை எல்­லைக் கிரா­மங்­க­ளில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ளாது மிகப் பெரிய தவறை விட்­டுள்­ளது. அத­னா­லேயே அங்கு ஆக்­கி­ர­மிப்­புக்­கள் இடம்­பெ­று­கின்­றன. இவ்­வாறு வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் சிவ­நே­சன் சுட்­டிக்­காட்­டி­னார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­கான வடக்கு மாகாண சபை­யின் சிறப்பு அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-:

வடக்கு மாகா­ணத்­தில் திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ ளைத் தடுக்க மாகாண சபை நட­வ­டிக்கை எடுக்­காது தவறு விட்­டுள்­ளது. மாகாண சபை விட்ட பிழை­யால் எமது பாரம் பரி­ய, நிலங்­கள் அப­க­ரிக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதைத் தடுக்க மாகாண சபை என்ன செய்­தது?.

எமது பிர­தே­சங்­க­ளில் இடம்­பெற்று வரும் திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை தடுக்க முயற்­சி­களை எடுத்­தோம் என யாரா­வது ஒரு­வ­ரா­வது மன­தில் கைவைத்­துச் சொல்­லுங்­கள்.எந்த நட­வ­டிக்­கை­யை­யும் செய­லில் காட்­டாது பேசிக்­கொண்டு இருப்­ப­தில் எவ்­வித பய­னும் இல்லை.

நாம் இங்கு மேற்­கொள்­கின்ற அபி­வி­ருத்தி திட்­டங்­களை நக­ரப் பகு­தி­க­ளி­லும் அதனை அண்­டிய பகு­தி­க­ளி­லுமே மேற்­கொண்டு வரு­கின்­றோம். எல்­லைக் கிரா­மங்­களை நாம் கைவிட்டு விட்­டோம். அதை அறிந்­த­வர்­கள் அங்கு திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை அபி­வி­ருத்தி என்ற போர்­வை­யில் செய்து வரு­கின்­ற­னர்.

எமது அபி­வி­ருத்தி திட்­டங்­களை எல்­லைப் புறங்­களை நோக்கி நகர்த்த வேண்­டும். அதன் ஊடாக ஒரு சிறி­த­ளவு இடங்­க­ளை­யா­வது எம்­மால் காப்­பாற்ற முடி­யும் என நினைக்­கின்­றேன் – – என்­றார்.

-tamilcnn.lk

TAGS: