ஜிஇ14 : நஜிப்பின் முகத்தில் பயம் தெரிந்தது, முஹைடின் கூறுகிறார்

முஹைடின் யாசினின் மனதில் இன்னமும் புதிதாகவே உள்ளது. 60 மாதங்கள் கடந்துவிட்டது, நீண்ட காலமாகக் கருதப்படக்கூடியதாக இருந்தாலும்கூட.

2013, ஏப்ரல் 3-ம் தேதி, முஹைடின் நஜிப்பின் வலது பக்கம் சாதாரணமாக நின்றிருந்தார், அப்போது நஜிப்பின் உண்மையான வலது கரம் முஹைடின்தான்.

இன்று அந்த இடத்தில் டாக்டர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி நின்றிருந்தார்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், நஜிப் பொதுத் தேர்தல் (ஜிஇ) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று அறிவித்தது.

ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல் இல்லை, அவர் முகத்தில் பயம் தெரிந்தது.

“நான் தொலைக்காட்சியில் பார்த்தேன், பிரதமர் பயத்தில் இருப்பது போல் தெரிந்தது,” என்று இன்று ஜொகூர் பாருவில் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 3 , 2009-ல், நஜிப் அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், நாட்டின் துணைப் பிரதமராக அம்னோவின் மூத்த தலைவரான முஹைடின் நியமிக்கப்பட்டார்.

1எம்டிபி ஊழல் வெடிக்கும் வரையில், அம்னோவின் விருப்பமான அணியாக நஜிப் மற்றும் முஹைடின் கூட்டணி கருதப்பட்டது.

தவறான புரிந்துணர்வு காரணமாக எழுந்த பிரச்சனை, கட்சிக்குள் விரிவடைந்து, இறுதியில் முஹைடின் பதவியைப் பறித்தது – கட்சி மற்றும் அரசாங்கத்தில் சில மூத்த தலைவர்கள் உட்பட.

அதன் பிறகு, முஹைடின் பெர்சத்து கட்சியைத் தொடங்கினார், தற்போது அக்கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ். தற்காலிகமாக இரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்னோவின் கோட்டையாக விளங்கும் ஜொகூர் மாநிலத்தைக் கைப்பற்ற, ஜொகூரின் மைந்தனான முஹைடினை ஹராப்பான் கூட்டணி நம்பியுள்ளது.

“என்ன நடக்கவுள்ளது என்பது அவருக்குத் தெரியும், அதனால்தான் அவர் கவலைப்படுகிறார். பி.என். வீழ்ந்துவிடும் என்பது அவருக்குத் தெரியும்,” என்றார் முஹைடின்.

இதற்கிடையில், நாட்டில் அரசியல் மாற்றங்களை செய்ய வாக்காளர்களுக்கு மிக பொருத்தமான நேரம் இது என்றும் முஹைடின் கூறினார்.

மேலும், நாட்டின் ஜனநாயக நடைமுறைகள், வெகுஜன வாக்காளர்களின் எண்ணிக்கையை அல்லாமல், நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் முஹைடின் தெரிவித்தார்.