ஜோகூர் மந்திரி பெசார் தொகுதியில் ஹரப்பான் நடத்திய பெரும் செராமா

 

நேற்றிரவு ஜோகூர் மந்திரி பெசார் காலெட் நோர்டின் தொகுதி பாசிர் கூடாங்கில் பக்கத்தான் ஹரப்பான் அதன் 4,000 த்திற்கு மேற்பட்டோர் பங்கேற்ற பிகேஆரின் சின்னம் “கண்” பொரித்த கொடிகளுடன் மலாய் சுனாமியின் தொடக்கத்தைக் காட்டிற்று..

4,000 த்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்தச் செராமில் பெரும்பாலானோர் மலாய்க்காரர்கள். பொதுவாக, பாசிர் கூடாங் அம்னோவின் ஒரு கோட்டையாகக் கருதப்படுகிறது.

இப்போது பெர்சத்துவின் வருகை அதற்கு மிரட்டலாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டிலிருந்து அங்கு பாரிசானின் பெரும்பான்மை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் பொதுவான ஒரு சின்னத்தை – பிகேஆரின் ‘கண்’ – கொண்டிருக்கும் அங்கு அறிவிக்கப்பட்டதோடு அக்கூட்டணி ஜோகூருக்கான தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.

அந்த தேர்தல் அறிக்கை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 1. 100 நாள்களில் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள்; 2. நீண்ட ஐந்து ஆண்டு காலத்திற்கான திட்டம்.

குறுகிய காலத்திற்கானவற்றில், மந்திரி பெசாரின் பதவிக் காலம் இரு தவணகளுக்கு மட்டுமே; பி40 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு 10 குபிக் மீட்டர் நீர் இலவசம் மற்றும் ஆண்டுக்கு ரிம500 இலவச மருத்துவ உதவி ஆகியவை அடங்கும்.

நீண்ட காலத் திட்டத்தின் கீழ் உபகாரச் சம்பளங்கள் அறிமுகப்படுத்தல், மாநில பல்கலைக்கழகம் உருவாக்குதல் மற்றும் 200,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை மேகொள்ளப்படும்.