48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது !

சிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி வைத்து அதிபர் அசாட்டால் நடத்தப்படும் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ஆகும். இதற்கு ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உறுதுணையாக உள்ளது. இன் நிலையில் நேற்றைய தினம்(9)  மக்கள் குடியிருப்பு மீது ஒரு வகையான நச்சு வாயு தாக்குதலை சிரிய விமானப்படையினர் மேற்கொண்டாகள்.

இதனால் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்ததோடு. பல சிறுவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகிய நிலையில் மீட்க்கப்பட்டார்கள். இந்த வீடியோ வெளியாகிய சில மணி நேரங்களில் தனது பாதுகாப்பு சபையை கூட்டிய அமெரிக்க அதிபர் டொனால் ரம் கடும் ஆலோசனைகளை நடத்தி. இறுதியில் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா உள்ளது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதோடு.

கடும் ராணுவ நடவடிக்கை ஒன்றை சிரிய அரசுக்கு எதிராக தாம் எடுக்க உள்ளதாகவும். 48 மணி நேரத்தில் இந்த முடிவை தாம் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. ரஷ்யா உஷாராகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இனி என்ன நடக்க உள்ளது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.