‘கெலிங்’ என்ற சொல்லுக்கு மகாதிர் மன்னிப்பு கோரினார்

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட், இந்தியர்களைக் குறிப்பிடும் ‘கெலிங்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

“நான் யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை, நான் ஒரு குழந்தையாக இருந்தபோது, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன், ஆனால் இப்போது அது அவமானமாகக் கருதப்படுகிறது.

“இது ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றால், நான் மன்னிப்பு கேட்கிறேன்,” என்று அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை, தேர்தல் ஆணையம் மீதான தனது விமர்சனத்தில், இந்தியர்களை இழிவுபடுத்துவதாக எண்ணப்படும் அச்சொல்லை மகாதீர் பயன்படுத்தினார்.