14வது பொது தேர்தல் மலேசிய தனித் தமிழர்களின் வாக்குகள் தற்சார்பு அரசியல் கட்சிக்கு சேர வேண்டும்

பாக்காத்தான், பாரிசான் தேர்தல் கொள்கை அறிக்கையின் ஒப்பீடல் ஆய்வுக்கு பின்னர், நாம் தமிழர் தமிழர்களுக்கு சில அரசியல் நகர்வுகளை முன் வைக்க கடமை பட்டுள்ளது.

பாக்காத்தான் ரிம 4 பில்லியனும், பாரிசான் ரிம 1 பில்லியனும் (புளுபிரிண்டில்) அறிவித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடலில் 80% மலேசியத் தனித்தமிழர்களுக்கு வழங்கிட வேண்டும். இது சிறப்பு ஜி எல் சி நிறுவனம் வழி பாதுகாத்து முதலீடு விதை seed capital நிதியாக அமுல் படுத்த வேண்டும்

இதுவரை எந்த அரசியல் கட்சியும, தலைவரும் தனித்தமிழர்களின் சமூகம், பொருளாதாரம், கல்வி போன்ற தமிழர் வாழ்வியல் நிலைத்தன்மைக்கு நிறந்திர தீர்வை தர வில்லை என்பதே தமிழர்களின் குமுறலாக உள்ளது.

இன்னும் 60% ஏழ்மை சமூதயமாக உள்ள இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் அரசியல் பொருளாதாரம் ஏமாற்றத்துக்குறியதாக இருக்கிறது என்று நாட்டின் தமிழர்களை பிரதிநிதிக்கும் நாம் தமிழர் இயக்கம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு மூலக்காரணம் ஆளும் கட்சியிலும் எதிர் கட்சியிலும் ஆளுமைமிக்க தமிழர் தலைவர்கள் இல்லை என்பதாக நாம் தமிழர் இயக்கத்தின் ஆலோசகர் திரு. பொன்ரங்கன் இச்சிக்கலை முன்வைத்தார்.

நாட்டின் தமிழர்களின் பொருளாதாரம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் இன்னும் 60% விழுக்காடு ஏழை சமூதாயத்தை சென்று சேரவில்லை. ஏதோ சலுகையில் பிச்சி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! நாங்கள் தமிழர்களுக்கு நாடாளுமன்ற அங்கிகாரம் பெற்ற நிதி உரிமைமிக்க உத்தரவக இருக்க வேண்டும்.

காரணம் இந்தியர் பட்டியலில் தமிழர் அல்லாதவர்கள் சுயநல களவுத்தனம் அரசியல் ஆளுமையில் கொள்ளைப் போகிறது.

அப்படியே ஓரிரு தமிழ்த் தலைவர்கள் இருந்தாலும் அரசியல் மேலாண்மையில் அடிமைகளாகவும் கட்சித் தலைவர்களுக்கு ஒத்து ஊதும் ஆமாம் சாமிகளாக இருப்பது இந்த சோகத்தின் விலிம்பாகும்.

(மஇகா) தலைவர்கள் முதல் (டிஏபி) மற்றும் (பிகேஆர்) போன்ற தேசிய கட்சிகளில் தலைவர்கள் திட்டமின்மை தரவுகள் ஏதுமின்றி கடந்த 30 ஆண்டுகாலத்தை கடத்திவிட்டனர். அப்படியோ இருந்தாலும் வெற்றிப்பெறவில்லை!

பக்காத்தானில் தமிழர்களுக்குக்கான சலுகைகள் உரிமையற்ற சவாலாக உள்ளது.

பாரிசானிலும் தற்காலிக பசி தீர்க்கும் அரசியல் விளையாட்டு பெருமைகளில் சமூகம் ஏமாந்துக் கிடக்கிறது.

கடந்த 30 ஆண்டுகாளகியும் தமிழர்களின் சொத்துடமை 0.2% தாண்டிப் போகவில்லை.

இந்தியர்கள் சொத்துடமை இன்னும் 0.5 இதில் தமிழர்களின் நிலை பதிலில்லா கேள்வியே? தமிழர்கள்
ஏற்றம் காண முடியாதற்கு அரசியல் செல்வாக்கு சொல்வாக்கு தோல்வியத்தான் நாம்மால் உணரமுடிகிறது.

ம இ கா வழி பங்குசந்தையில் முன்பு 2.5 பில்லியனும் பிறகு 1.5 பில்லியனும் ஏழைகளிடம் இன்று சேமிப்பாக ஏற்பது கடனாளிகளாக நிலை தடுமாறச் செய்வது. பொருளாதார மேம்பாடு, சொத்துடமை என்பதெல்லாம் குறைபிரவசத்தில் குளிர் காயும் நிலையாகத்தான் பார்க்கிறோம்.

மலேசிய தனித் தமிழர்களின் அரசியல் நோக்கும் போக்கும் வெந்ததை தின்று வந்ததை துப்பும் நிலையில் அறிவார்ந்த ஆளுமையின்றி சரியான தலைமைத்துவமின்றி இயக்கங்களும் சொத்தையாக வித்தை காட்டிக் கொண்டு வீழ்கிறது.

பக்காத்தான், பாரிசான் மற்றும் பாசு கட்சிகளும், தமிழர்களை இந்தியனாக பார்க்கும் பார்வை இந்நாட்டின் ஒரு தொன்மையான இனத் துரோகமாக பதிவு செய்கிறோம்.

ஏன் இந்த அவலநிலை..?

மலேசிய தமிழர்களின் வறுமைப்பிடியும் பேடிகளின் போக்கும் அடிமைகளாக்கி சோரம் போகும் நிலையில், நாங்கள் தனித்தமிழர் தலைவர்களைத் தேடுகிறோம்.

மலேசிய நாம் தமிழர், தமிழர் தேசியம் போன்ற இனமான தமிழர் தேசிய இயக்கங்கள் தமிழர் அரசியல் தேர்வுக்கு உந்து சக்தியாக மாறுவது காலத்தின் கட்டாயமாக கருதுகிறோம்.

சாதி மத உணர்வுகளை ஒத்தி வைத்து விட்டு அரசியல் களமிறங்கும் காலம் கனிந்துவிட்டது.

இந்த 14வது பொதுத் தேர்தலில் நல்ல தூர நோக்கத் தமிழர் வேட்பாளர்கள் யாரையும் நம்மால் காண முடியாதற்கு இந்தியன் அரசியல் தனமே காரணமாகிறது. 89% தமிழர்கள் இந்தியன் பட்டியலிருந்து பிரிய வேண்டும்.இது இன பாகுபாடு அரசிலாக தமிழர்கள் உரிமைக்கு அரசு வழி விட வேண்டு அத்தக அரசியல் கட்சி வேண்டும்.

எங்களின் வேண்டுகோளின் உச்ச நிலையாக மலேசியத் தமிழர்கள் தெளிவாக இனம் காக்கும் அரசியல் நகர்வுக்கு தயாராக தனித்தமிழர்கள் இளைஞர் படைகள் வீறு கொண்டு எழ வேண்டும்.

மலேசிய நாம் தமிழர் இயக்கம் இனநலன் கருதி ‘தற்சார்பு’ அரசியலை விரும்புகின்றது.

சனநாயகம் செழிக்க மலேசிய தமிழர்கள் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்திற்கும் ‘தற்சார்பு’ அரசியல் தேர்வுக்கு அங்கிகாரம் வழங்க முன் வர வேண்டும்.

இதையே மலேசியத் தமிழர்களின் நிலைப்பாடாக கொள்ள வேண்டுமென மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. முஅ கலைமுகிலன் தமது ஆலோசனையை முன் வைத்தார்.

தமிழர்களுக்கான பொதுத்தேர்தல் கோரிக்கை மடலிதழ் வரும் 22/4/ 2018 மாலை 7 மணிக்கு கோலாலம்பூர் சீனர் மண்டபத்தில் வெளியிடு காணும். தமிழ்த்தோழர்கள் வந்து ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறோம். அன்பளிப்பு வழங்குவோர் Tamilar Progressive Team எனும் பெயருக்கு வழங்கலாம்.

செய்தி: பொன் ரங்கன் தமிழர் தேசியம் மலேசியா – 016 6944223. [email protected] com