மலேசியாவில் மிகவும் மதிக்கப்படும் மனிதர் பட்டியலில் முதலிடம் மகாதிருக்கு

மலேசியாவில்  மிகவும்  மதிக்கப்படும்   மனிதர்   யார்  என்று  இணையத்தளத்தில்   நடத்தப்பட்ட    ஆய்வில்   முதலிடத்தைப்  பெற்றிருப்பவர்  பக்கத்தான்  ஹரப்பான்  பிரதமர்  வேட்பாளர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்.

யுகே-இல்  உள்ள  ஆய்வு  நிறுவனம்  YouGov   நடத்திய    ஆய்வில்   கலந்துகொண்டவர்களில்   15 விழுக்காட்டினர்  மகாதிரை  மதிப்பதாகக்  கூறினர்.

இரண்டாவது   இடத்தைப்  பெற்றிருப்பவர்  பில் கேட்ஸ்.  8.30  விழுக்காட்டினர்   ஆதரவை   அவர்   பெற்றிருந்தார்.

பராமரிப்புப்  பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்கால்   பட்டியலில்   14வது   இடத்தைத்தான்  பெற  முடிந்தது.

மலேசியாவின்   மிகவும்  மதிக்கப்படும்  பெண்மனி  பட்டியலில்  முதலிடம்   பெற்றவர்   பாடகர்   சித்தி   நூர்ஹலிசா. 14.10 விழுக்காட்டினர்   ஆதரவை  அவர்  பெற்றிருந்தார்.  இரண்டாவது  இடம்    மகாதிரின்    துணைவியார்    டாக்டர்   சித்தி   ஹஸ்மா  முகம்மட்  அலிக்கு.