அரசு ஊழியர்கள் கிறிஸ்துவ இவேஞ்சலிஸ்ட் பற்றி ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும், எச்சரிக்கிறார் கு நான்

 

பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் டிஎபியின் செல்வாக்கு பற்றி அரசாங்க ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டிஎபி அதிகமான கிறிஸ்துவ நற்செய்தியாளர்களைக் (இவேஞ்சலிஸ்ட்) கொண்டிருக்கிறது என்று அவர் கூறிக்கொண்டார்.

நாம் மிக வெளிப்படையான சவாலை எதிர்கொண்டுள்ளோம். ஒரு கூட்டணி இருக்கிறது. அதன் முதுகெலும்பு டிஎபி. அதன் தலைவர்களில் பெரும்பாலானோர்
கிறிஸ்துவ நற்செய்தியாளர்கள்.

அவர்கள் கத்தோலிக்கர் என்றால் நான் அவர்களை நம்புவேன். ஆனால் அவர்கள் நற்செய்தியாளர்கள், புதிய கிறிஸ்துவர்கள், அதுதான் பிரச்சனை என்று என்றாரவர்.

உண்மையில் இதுதான் டிஎபி. இதுதான் பக்கத்தான் ஹரப்பானின் முதுகெலும்பு. அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று புத்ரா ஜெயாவில் இன்று இரண்டு சுராவ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

எனினும், தாம் இதர சமயங்களுக்கு எதிரானவர் அல்லர் என்பதை கு நான் வலியுறுத்தினார்.

புத்ரா ஜெயா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த கு நான், இஸ்லாம் நாட்டின் இறையாண்மையை நிர்ணயிக்கிறது, மலாய் ஆட்சியாளர்களை அவர் மேற்கோள் காட்டினார்.

ஆனால், நாம் கவனமாக இல்லை என்றால், இவை அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்றார்.