அமானாவில் இந்திய முஸ்லிம் பிரிவு, மாட் சாபு அறிவித்தார்

அமானா கட்சியின் தேசியத் தலைவர், முகமட் சாபு, கட்சியின் இந்திய முஸ்லிம் வம்சாவளி உறுப்பினர்களுக்கு ஒரு தனிப் பிரிவை இன்று அறிமுகப்படுத்தினார்.

சுபாங்கில்,  இந்திய முஸ்லிம் சமூக உறுப்பினர்களுடனான ஒரு சந்திப்பின் போது, அவர் இந்த விஷயத்தை அறிவித்தார்.

ஓர் இந்திய முஸ்லீம் அக்கட்சியில் சேர்ந்தவுடன், அவர்களுக்கான ஒரு தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்று அவரும் அவருடைய மற்ற தலைவர்களும் முன்னமே பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

“இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு மற்றும் இந்திய முஸ்லீம் பிரிவு போன்றவற்றை நாம் கொண்டிருப்போம்,” என்று அவர் கூறியதை, அங்கு திரண்டிருந்த சுமார் 200 பங்கேற்பாளர்கள் பலத்த கைத்தட்டலுடன் பாராட்டி வரவேற்றனர்.