பிஎன் வேட்பாளர்கள் நியமன நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்

 

14 ஆவது பொதுத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர்களின் பட்டியல் வேட்பாளர் நியமன நாளுக்கு ஏழு அல்லது 10 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிஎன்னின் தலைமைச் செயலாளர் தங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.

இருப்பினும், அந்த அறிவிப்பு நாள் குறித்து பிஎன் தலைவர் நஜிப் ரசாக் இன்னும் எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்றாரவர்.

தேர்தல் வேட்பாளர் நியமன நாள் ஏப்ரல் 28 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வங்சா மாஜு தொகுதி மசீசவுக்கு கொடுக்கப்படும் என்பதில் அதிருப்தியடைந்துள்ள அம்னோ இளைஞர் பகுதி உறுப்பினர்கள் பிஎன் கொடிகளை அகற்றியது பற்றி கூறப்படுவது குறித்து கேட்ட போது, அதில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.