ஜிஇ14: பெரும்பாலான இடங்களில் பாஸ் போட்டி

பாஸ்  கட்சி     எதிர்வரும்  14வது   பொதுத்  தேர்தலில்   222   நாடாளுமன்ற  இடங்களில்  150க்கு  மேற்பட்ட    இடங்களுக்கும்  587  சட்டமன்ற   இடங்களில்   பெரும்பாலான    இடங்களுக்கும்   போட்டியிடும். சரவாக்கில்   மட்டும்   அது  போட்டியிடாது.

மலேசியாவில்   எந்தவொரு   கட்சியும்   ஒரு  பொதுத்   தேர்தலில்   இத்தனை  இடங்களுக்குப்   போட்டியிட்டது  இல்லை. 13வது பொதுத்   தேர்தலில்  அம்னோகூட  121   நாடாளுமன்ற   இடங்களுக்குத்தான்    போட்டியிட்டது.

நேற்றிரவு  பினாங்கில்   கூடிப்பேசிய     12-பேரடங்கிய  பாஸ்    செயல்குழு   95 விழுக்காட்டு   வேட்பாளர்களை  இறுதி   செய்துவிட்டதாக   பாஸ்   தலைமைச்   செயலாளர்   தகியுடின்   ஹசான்  கூறினார்.

“வேட்பாளர்  பட்டியல்  சாபா,  சரவாக் (ஏப்ரல் 211)  கிளந்தான் (ஏப்ரல் 25)  நீங்கலாக,  ஏப்ரல்  19-இல்   அறிவிக்கப்படும்”,  என்றாரவர்.