ஷரிசாட் பண்டார் துன் ரசாக்-கில் போட்டியிட மாட்டாராம்

அம்னோ  மகளிர்   தலைவர்   ஷரிசாட்   அப்துல்   ஜலில்,   எதிர்வரும்   14வது   பொதுத்   தேர்தலில்   பண்டார்   துன்   அப்துல்   ரசாக்   நாடாளுமன்றத்   தொகுதியில்     போட்டியிடுவார்  என்று  கூறப்படுவதை   மறுத்தார்.

“பலர்  என்னிடம்   வந்து  பண்டார்  துன்   அப்துல்   ரசாக்கில்  போட்டியிடுவீர்களா  என்று  வினவுகிறார்கள்.

“இல்லை  என்பதே   என்னுடைய   பதில்.   இவ்வளவுக்கும்    பண்டார்   துன்  அப்துல்  ரசாக்  பாரிசான்   நேசனல்    வெற்றிபெறக்  கூடிய  இடமாகும்”,  என்றாரவர்.

2013  பொதுத்   தேர்தலில்   போட்டியிடாமல்  ஒதுங்கி  இருந்த   ஷரிசாட்  ஜிஇ  14-இல்  திரும்ப  வந்து   போட்டியிடுவார்   என்று   எதிர்பார்க்கப்படுகிறது.

2008-இல்  லெம்பா  பந்தாயில்  போட்டியிட்ட    அவர்    பிகேஆரின்   அறிமுக   வேட்பாளர்    நூருல்  இஸ்ஸா  அன்வாரிடம்   தோற்றார்.