காஷ்மீர் சிறுமி படுகொலை போல பயங்கரம் – ஹரியானாவில் சிறுமியின் உடல் கால்வாயில் வீச்சு

சண்டிகர்: ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி கொலை என அடுத்தடுத்த அதிர்வுகள் அடங்குவதற்குள் ஹரியானாவில் மேலும் ஒரு சிறுமி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது பெண் குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தின், ரோஹ்தாக் மாவட்டத்தில் சமர்கோபல்பூரில் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து போலீசார் 7 வயது சிறுமியின் உடலை கைப்பற்றியுள்ளனர். சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவ ஆய்வுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் சிறுமி குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

நிகழ்விடத்திற்கு வந்த தடவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் உடல் பெருமளவு சிதைந்துள்ளதால் கொலை நடைபெற்று ஒருவாரம் காலம் ஆகியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்தால் தான் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற தகவல் தெரியவரும். தொடர்ந்து சிறுமிகளின் மீதான வன்முறை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: