லியோ பெந்தோங்கில் தோல்வியடைவார் என்று பாஸ் வேட்பாளர் கூறுகிறார்


 

மே 9 பொதுத் தேர்தலில் மசீச தலைவர் லியோ தியோங் லாய் அவரது பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வியடைவார் என்று எதிர்பார்ப்பதாக பாஸ் கட்சியின் பெலாஙை மாநில சட்ட மன்ற வேட்பாளர் அப்துல் ஹமிட் பாஹாதிம் கூறுகிறார்.

பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியின் நான்கு மாநிலத் தொகுதிகளில் பெலாஙை ஒன்றாகும்.

பெந்தோங் வாக்காளர்களில் பெருமளவில் இருக்கும் மலாய்க்காரர்கள் பாஸின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் ஷரியா நீதிமன்ற சட்ட திருத்த மசோதா (சட்டம் 355) மீது லியோ கூறியிருந்த கருத்தால் குழப்பம் அடைந்துள்ளனர் என்று அப்துல் ஹமிட் கூறிக்கொண்டார்.

லியோ கூறியதின் தாக்கம் மிகப் பெரியதாகும். அது சட்டம் 355-க்கு மட்டும் உட்பட்டதல்ல. அது இஸ்லாமிய பிரச்சனைகள் சம்பந்தப்பட்டதாகும். பெந்தோங் வாசிகள் அவர்களின் எதிர்ப்பை லியோவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். ஆனால், அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்றார் அப்துல் ஹமிட்.

பாஸ் தலைவர் ஹாடி அவரது மசோதாவை தாக்கல் செய்து அது மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடப் போவதாக லியோ அறிவித்திருந்தார்.

இப்போது அவரைப் பற்றிய பிரச்சனை அவர் பாஸை ‘ஹெந்தாம்’ (தாக்கியது) பண்ணியது அல்ல, ஆனால் அவர் இஸ்லாத்தை ‘ஹெந்தாம்’ பண்ணியதாகும். இதன் தாக்கம் மிகப் பெரியது என்று ஹமிட் கூறினார்.

லியோ முன்னதாக பெற்ற வாக்குகளில் மிகப் பெரிய அளவிலானது மலாய்க்காரர்களின் வாக்குகளாகும். அவர் சீன வாக்குகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், அவருக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று ஹமிட் மேலும் கூறினார்.