லண்டனில் 18.5.2009 என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது- இறுதி யுத்தத்தில் நடந்த நிகழ்வுகள். சினிமா படமாக.

லண்டன் ஹரோவில் 18.5.2008 என்ற திரைப்படத்தின் ரெயிலர் காட்சிகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. புலம்பெயர் வாழ் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடு இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் கண்பிக்கப்பட்டதோடு. இத்திரைப்படம் தொடர்பான விரிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவரும் தமிழ் உணவர்வாளருமான, கு.கணேஷன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

17 மே மற்றும் 18 மே 2008 அன்று முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது ? ஆனந்தபுரச் சமரில் நடந்த அனைத்து விடையங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இந்த திரைப்படம் 18.05.2018 அன்று அனைத்து திரை அரங்குகளிலும் வெளியிடப்படவுள்ள நிலையில். பல புலம்பெயர் தேசங்களிலும் இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பல ஊடகவியலாளர்கள், தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள், மற்றும் வணிக நிலைய உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள். அனைவரது ஏகோபித்த ஆதரவோடு இந்த திரைப்படம் அடுத்த மாதம் லண்டனில் திரையிடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-athirvu.com