ஜெலுபு தொகுதி மஇகாவுக்கு, கலக்கத்தில் ரயிஸ் யாத்திம்

 

நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்ற இருக்கை மஇகாவுக்கு கொடுக்கப்படும் என்ற வதந்திகளால் முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் கலக்கமடைந்துள்ளார்.

அந்த இருக்கை இப்போது அம்னோவின் வசம் இருக்கிறது. 2013 ஆண்டு வரையில் அத்தொகுதி ரயிஸ் வசம் இருந்தது. ஜெலுபு அம்னோ தொகுதி தலைவர் இந்த விவகாரத்தை அவருக்கு தெரிவித்தாக ரயிஸ் கூறினார்..

இதை தம்மால் ஒத்துக்கொள்ள முடியாது என்று கூறிய ரயிஸ், அதற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறினார்.

அத்தொகுதியில் 33,000 மலாய்க்காரர்கள், 12,000 த்திற்கு கூடுதலான சீனர்கள் மற்றும் 2,600 இந்தியர்கள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள் என்றாரவர்.

இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவது கடினமாகும், குறிப்பாக ஜெலுபுவில் அம்னோ நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. முறையான பேச்சுவார்த்தை இல்லாமல் இப்படி திடீரென்று ஜெலுபுவை மஇகாவிடம் கொடுப்பது சுலபமல்ல என்று ரயிஸ் யாத்திம் மலேசியாகினியிடம் கூறினார்.

ஜெலுபு இருக்கை மஇகாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதை ஒரு மஇகா வட்டாரம் உறுதிப்படுத்தியது.

“ஆம், அந்த வேட்பாளர் எஸ்.கே. தேவமணி (மஇகா துணைத் தலைவர்) என்று அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.