1எம்டிபி குறித்து பதிலளிக்க தனி வலைத்தளம் தொடங்கினார் அருள்

1எம்டிபி   தலைமை   செயல்  அதிகாரி   அருள் கண்ட  கந்தசாமி,   1எம்டிபி  விவகாரம்  தொடர்பில்   தாம்  அளித்த  விளக்கங்களைக்  கொண்ட   ஒரு  வலைத்தளத்தைத்   தொடங்கியுள்ளார்.

www.arulkanda.com  என்னும்   அவ்வலைத்தளத்தில்    1எம்டிபி   விவகாரம்  தொடர்பான   செய்திகளும்   அருளின்   பேச்சுகளைக்  கொண்ட   காணொளிகளும்   இடம்பெற்றுள்ளன.

வலைத்தளம்   தொடங்குவது   பற்றி   அருள்   மலேசியன்   டைஜஸ்ட்டுக்கு  வழங்கிய   நேர்காணலும்    அதில்  உள்ளது.  அந்த    நேர்காணலில்   நாடு  முழுக்க      1எம்டிபி  விளக்கக்  கூட்டங்கள்   நடத்த  முற்பட்டபோதுதான்   ஒரு  வலைத்தளம்    தொடங்கும்   எண்ணம்   உதித்ததாக  அருள்  கூறியுள்ளார்.

“இது  1எம்டிபி  தொடர்பான  ஒரு  தகவல்   களஞ்சியமாக   விளங்க   வேண்டும்,  என்பதுதான்   என்னுடைய   நோக்கம்.  யாரெல்லாம்   1எம்டிபி  தொடர்பான   உண்மைகளைத்   தெரிந்த கொள்ள  விரும்புகிறார்களோ    அவர்கள்தான்   எங்களின்  இலக்கு”,  என்றவர்  சொன்னார்.

பேச்சுகளை  மட்டுமல்ல.   தம்முடைய    கருத்துகளைப்   பதிவு   செய்யும்  எண்ணமும்   அவருக்கு   உண்டு. வலைத்தளம்  தொடங்கப்பட்ட   18மணி  நேரத்தில்   கிடைத்த  “மகத்தான”   ஆதரவு  அருளை  வியக்க  வைத்து  விட்டதாம்.