நஸ்ரி: இப்போது அம்னோவின் தலையெழுத்து நீதிமன்றத்தின் கையில்

 

அம்னோவின் தலையெழுத்து இப்போது நீதிமன்றத்தின் கையில் இருப்பாதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார்.

16 அம்னோ உறுப்பினர் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அம்னோவின் சட்டப்பூர்வமான நிலை குறித்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இது அம்னோ சட்டவிரோதமானது என்று பிரகனப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

இவ்விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், நீதிமன்றம் முடிவெடுக்கட்டும் என்றாரவர்.

நமக்கு திருப்தி இல்லையென்றால், நாம் மேல்முறையீடு செய்யலாம் என்று நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.

1987 இல் கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து அத்தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விளைவாக 1988 இல் அம்னோ கலைக்கப்பட்டது. அவ்வாறு நடக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நஸ்ரி, நாம் அனுமானங்கள் ஏதும் செய்ய முடியாது என்றார்.