அரசாங்கத்தைக் குறைகூறியதற்காக அம்னோ மூத்த தலைவர்களை ஷாரிஸாட் சாடினார்

 

அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிய பின்னர் கட்சியைக் குறைகூறும் கட்சியின் மூத்த தலைவர்களை அம்னோ மகளிர் தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் கடுமையாகச் சாடினார்.

யாரையும் பெயர் குறிப்பிடாமல், அம்னோதான் இந்த மூத்த தலைவர்களின் வெற்றிக்கு உதவியது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.

தற்போது, தங்களுடைய இடத்தை மறந்து விட்ட சில மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். பிஎன் போராட்டம் இருந்திராவிட்டால் அவர்கள் யாராக இருப்பார்கள்?

இப்போது அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்தப் பதவியும் இல்லை. அதனால் எல்லாமே தவறாகத் தெரிகிறது. அதில் ஆண் மட்டும் இல்லை, பெண்ணும்கூட இருக்கிறார் என்று ஷாரிஸாட் கூறினார்.

“அந்தப் பெண், அடோய், பதவியில் இருந்த போது சக்தி வாய்ந்தவராக இருந்தார். ஆனால், அவருக்கு எந்தப் பதவியும் இல்லாததால் அவர் பல்வேறான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்”, என்று கோலாலம்பூர் லெம்பா பந்தாயில் பிஎன் பெண்கள் பகுதி உறுப்பினர்களிடம் ஷாரிஸாட் கூறினார்.