ஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்

சென்னை: நடிகர் சிம்பு ஒரேடியடியாக மாறியுள்ளது கோலிவுட்காரர்களை வியப்படைய வைத்துள்ளது.

சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு முன்பு அவர் பிரச்சனைகளில் சிக்கி வந்தார். ஆனால் தற்போது மனிதர் அநியாயத்திற்கு மாறிவிட்டார். வீட்டு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாக புகார் எழுந்த நிலையில் அவர் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்துவிடும் அளவுக்கு மாறியுள்ளார்.

பட விஷயத்தில் மட்டும் அல்ல பல விஷயத்தில் சிம்பு மாறியுள்ளார்.

சிம்பு

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கும், சிம்புவுக்கும் ஆகாது என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் அந்த மனக்கசப்பை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு விஷாலுடன் சமரசமாகிவிட்டார் சிம்பு.

வியப்பு

நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது குறித்து நேற்று நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட சிம்பு விஷாலை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது அங்கிருந்தவர்களை வியப்பு கலந்த மகிழ்ச்சி அடைய வைத்தது.

எப்படி?

சிம்பு எப்படி இந்த அளவுக்கு மாறிவிட்டார் என்று வியக்காதவர்களே இல்லை. காரணம் எதுவாக இருந்தாலும் அவரின் மாற்றம் நன்றாக உள்ளது என்று அவரை பாராட்டுகிறார்கள்.

மரியாதை

சிம்புவை பார்த்தால் வம்பு என்று ஒதுங்கியவர்கள் கூட தற்போது அவர் மீது மரியாதை கொண்டுள்ளனர். காவிரி விஷயத்தில் அவர் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com