உங்கள் கருத்து: ஆர்ஓஎஸ் அம்னோவுக்கு இரண்டாவது நீட்டிப்பு கொடுத்தது சட்டப்படி தப்பு

‘ஹரப்பானுக்குச்  சிக்கல்  உண்டாக்குவதில்   மும்முரமாக  இருந்த   அம்னோ  தானே  மாட்டிக்கொண்டது’

எர்கோ சம்: அம்னோ   தலைவர்   நஜிப்   அப்துல்  ரசாக்   கட்சி   சட்டத்  திட்டங்களுக்கும்   அப்பாற்பட்டவர்  என்பதற்கு  அம்னோ   கட்சியினருக்கும்   பிஎன்  பங்காளிக்  கட்சியினருக்கும்   வேறு    என்ன    சான்றுகள்    வேண்டும்?

அம்னோ  உறுப்பினர்கள்  ஒரு  சர்வாதிகாரிக்கு   அடிபணிந்து  கிடப்பதால்   தண்டனை    கிடைக்கும்    என்ற    அச்சமின்றி,     அவரால்  முக்கிய  சட்டவிதிகளைத்  தூக்கிவீச  முடிகிறது,  மீற  முடிகிறது.

சங்கப்  பதிவகம்தான்  மேலும்  ஒரு  நீட்டிப்பை   வழங்கியுள்ளதாகக்  கூறியுள்ளார்  கட்சித்   தலைமைச்   செயலாளர்     தெங்கு   அட்னான்  தெங்கு  மன்சூர்.  இருக்கட்டும்,  எந்த   அடிப்படையில்    அந்த   நீட்டிப்பு   கொடுக்கப்பட்டது    என்பதை   நாங்கள்    தெரிந்து  கொள்ளலாமா?

ஆர்ஓஎஸ்   கொடுத்த  நீட்டிப்பு   அம்னோ   அமைப்பு  விதிகளுக்கு  முரணானது.  எனவே,  ஏப்ரல்   20இலிருந்து  அம்னோ   ஒரு   சட்டவிரோத   அரசியல்  கட்சி.

அகுய்னாஸ்: ஆர்ஓஎஸ்-ஸுக்கு   கட்சி  அமைப்பு  விதிகளைத்  திருத்தவோ,  மாற்றவோ,  அதில்  எதையும்  சேர்க்கவோ   அதிகாரம்  இல்லை    என்று  சொல்வது  நியாயமே.  சட்டவிதிகளில்  உள்ளதை    அமல்படுத்தும்  அதிகாரம்   மட்டுமே   அதற்குண்டு.

அதன்படி  பார்த்தால்  ஆர்ஓஎஸ்   செய்தது  சட்டவிரோதமானதே.

நீதி:  அம்னோ  சட்டவிதிகள்   அல்லது   ஆர்ஓஎஸ்   அதிகாரம்    என்று  அப்படி,  இப்படி,  எப்படிப்  பார்த்தாலும்   அம்னோ   கட்சித்   தேர்தலை    நடத்தாமலிருப்பதற்குச்  சட்டப்படியான     காரணம்   எதுவும்   இல்லை.

ஆர்ஓஎஸ்  நீட்டிப்பு  கொடுத்தது   செல்லாது.  ஏனென்றால்  அம்னோ   அமைப்புவிதிகளில்   அதற்கு   இடமில்லை.   அப்படிச்   செய்வதாக   இருந்தால்   அமைப்புவிதிகளைத்   திருத்தி  இருக்க  வேண்டும்.

முதல்  நீட்டிப்பு  காலாவதி    ஆகும்வரை   காத்திருந்து   அதன்பின்  வழக்கு   தொடுத்த   16  அம்னோ  உறுப்பினர்களும்   கெட்டிக்காரர்கள்.

சுயேச்சை  பார்வையாளன்:  அம்னோ    அமைப்புவிதிகளில்   18 மாதத்துக்குமேல்  நீட்டிப்பு  கொடுக்க   இடமில்லை.  அது  தெளிவாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது.  பிறகு  என்ன  பேச்சு  வேண்டியிருக்கு?

பெயரிலி மலேசியா 2018: தலைவர்கள்  வருவார்கள்,  போவார்கள். இன்று  இருப்பார்கள்.  நாளை  இருக்க  மாட்டார்கள்.   இன்று   சர்வ  வல்லமை  பொருந்தியவராக  விளங்கும்   ஒருவர்   நாளை   ஒன்றுமில்லாதவராகி  விடலாம்.  எல்லாரும்   சட்டத்தை  மதிக்க   வேண்டும்.   சட்டம்தான்  ஒப்புயர்வற்றது.

சட்டம்,  நண்பர்களோ  பகைவர்களோ   அனைவருக்கும்   பொதுவானது.  ஆர்ஓஎஸ்   சட்டத்தை   மதிக்க   வேண்டும்.   அனைவருக்கும்   ஒரே  மாதிரியாகத்தான்   சட்டத்தை  அமல்படுத்த  வேண்டும்.

ஒரே மாதிரி  நடைமுறையைக்   கடைப்பிடிக்க   முடியாத  பட்சத்தில்  அதன்  தலைமைச்    செயலாளர்    பணிவிலகுவதே   சாலச்சிறந்தது.

பிஎன்னுக்கு  ஒரு  சட்டம்,  பக்கத்தானுக்கு   ஒரு  சட்டம்,  பாஸுக்கு   ஒரு   சட்டம்   இருக்க  முடியாது.

நியாயம்:     தன்  வினை  தன்னைச்   சுடும். நீதிமன்றத்தால்  வேறு  மாதிரியாக  நடந்துகொள்ள  இயலாது.  அப்படிச்  செய்தால்   அது   ஒரு  கட்சி  சார்பாக   நடந்து கொள்வது   தெளிவாக   தெரிய  வரும்.

மலேசியாவை நேசி- மாறு:   அம்னோவால்   சட்டத்தைப்  பின்பற்ற  இயலாதபோது   ஆளும்  கூட்டணியில்   மிகப்   பெரிய   கட்சியான    அது    நாட்டை   எப்படி   ஆளப்  போகிறது?

நடப்பதை   நாடே   கவனித்துக்  கொண்டிருக்கிறது.  நீதிபதி  யாராக    இருந்தாலும்   மக்களை   ஏமாற்றி   விடாதீர்கள்.